Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 241 Kurunthogai 241

அவன் குன்ற நாடன்
நான் அவன்மீது கொண்டுள்ள காதல் உணர்வுகளை அடக்கிக் கொள்கிறேன்

சிறுவர்கள் தம் கன்றுக்குட்டிகளை ஆற்றுப்படுத்திவிட்டு (மேய விட்டுவிட்டு) வேங்கைப் பூ பூத்துக் குலுங்குவதைப் பார்த்து அந்த மரத்தில் ஏறாமல் கூச்சலிடும் பூசல் குன்றத்துப் பிளவுகளில் எதிரொலிக்கும் நாடன் அவன்

ஆனால்
அவனைக் கண்ட கண்கள் அழுகின்றன
அதற்கு நான் என்ன செய்வேன்

அழாதே என்று தேற்றும் தோழிக்குத் தலைவி கூறும் விடை  



No comments:

Post a Comment