Pages

Monday 22 April 2019

குறுந்தொகை 238 Kurunthogai 238

தொண்டி நகரம் போன்றது என் நலம்
மகிழ்ந
பொருள் ஈட்டிக்கொண்டு வருவேன் என்று சூள் உரைக்கிறாய்
அதற்காக நீ செல்வாய் ஆயின் தொண்டி நகரம் போன்ற என் அழகினை என்னிடமே தந்துவிட்டுச் செல்க.
பிரிந்தால் உன்னை எண்ணி என் நலம் வாடிவிடும் அல்லவா

வயலில் உள்ள உரலில் நெல்லைப் போட்டு அவல் இடிக்கும் பெண்டிர் தம் உலக்கையை வரப்பில் சாய்த்து வைத்துவிட்டு வண்டல் இழைத்து விளையாடுவர்
இதுதான் தொண்டி நகர நலன்.

தலைவன் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்கிறாள், தலைவி 



No comments:

Post a Comment