கணி கணிப்பு - 32 மாதம்
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க,
அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன்,
‘எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க!’ என்று ஏத்த-
மாடல மறையவன் கூறிய செய்திகளையெல்லாம் வேந்தன் கேட்டுக்கொண்டிருந்தபோது இருள் பகலை விழுங்கத் தொடங்கியது. மாலைக்காலம் படர்ந்துகொண்டிருந்தது. வானம் செந்நிறத்தில் தோற்றமளித்தது. வானத்தில் பிறைநிலா தோன்றியது. அதனைச் செங்குட்டுவன் நோக்கினான். அரசன் குறிப்பறிந்த கணி "வஞ்சி நகரை விட்டு நாம் நீங்கி 32 மாதங்கள் ஆயின; வேந்தே வாழ்க" என்று கணித்துக் கூறினான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment