சோழ நாட்டு ஆட்சி எவ்வாறு உள்ளது?
கொடும் பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
சித்திர விதானத்து, செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
‘இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ?’ என-
வெள்ளிடைப்பாடி வீட்டு அரண்மனைக்குச் செங்குட்டுவன் சென்றான். அது நீண்ட வயிரத் தூண்களை வரியாக நிறுத்தி, மூடாக்குத் துணி போட்டு, கொடி கட்டி, அமைக்கப்பட்ட பல கூடாரங்களுடன் விளங்கியது. அந்தக் கூடாரவகள் சிறியனவும், பெரியனவுமான குன்றுகளைப் போல விளங்கின. அந்த வெள்ளிடைப்பாடி தெருக்களின் வழியாகச் செங்குட்டுவன் சென்றான். செங்குட்டுவனுக்கென்று தனியே அங்கு அரண்மனை ஒன்று இருந்தது. அது கைவினைக் கலைஞர்களால் சித்திர மாடம், பொன் திண்ணை ஆகியவற்றுடன் விளங்கியது. அதற்குள் சென்ற செங்குட்டுவன் வாயில் காவலனிடம் சொல்லி, மாடலனை அழைத்துவருமாறு கூறினான். சோழநாட்டின் நிலைமை பற்றித் தனியே வினவினான். இளங்கோ மன்னர் ஒன்பது பேரும் இறந்த பின்னர், மன்னனின் செங்கோலாட்சி எவ்வாறு உள்ளது என வினவினான்,
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment