Pages

Sunday, 1 October 2017

சிலப்பதிகாரம் 27-18 Silappathikaram 27-18

வெற்றிவேற் செழியன் 
வெற்றி வேல் செழியன்
(பொற்றேர்ச் செழியன்)
கோவலனைக் கொன்ற பாண்டியனுக்குப் பின்னர் அரியணை ஏறினான்

கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல்காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என-

தென்னாட்டு நிலைமை பற்றிச் செங்குட்டுவன் கேட்டதற்கு மாடலன் இப்போது விளக்கமாகத் தெரிவிக்கிறான்.
அடுத்து அரசாள வேண்டிய பாண்டியன் வெற்றிவேல் செழியன். பாண்டியன்  தவறு செய்யக் காரணமாக இருந்தவர் பொற்கொல்லர்கள் என எண்ணி, ஆயிரம் பொற்கொல்லலர்களை ஒரே பகலில் கொன்று தன் ஒரு முலையைக் குறைத்த திருமா பத்தினிக்குப் பலி கொடுத்தான். புகழுரை மிக்க மதுரை அரசன் இல்லாமல் அல்லல் படும்  காலத்தில் தென்புலத்தின் தீதில்லாச் சிறப்பினைக் காக்கும்பொருட்டு, ஏழு நிறக் குதிரை பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் வரும் சூரியன்  போல் தோன்றி, அரசுக் கட்டில் அரியணையில் ஏறினான். 
எங்கோ, செங்குட்டுவன் ஊழிதோறும் உலகம் காத்து வாழ்க.  

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை

No comments:

Post a Comment