பழையன் வேம்பை வெட்டியவன், செங்குட்டுவன்
பழையன் காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்:
பழையன் வேப்பமரத்தைக் காவல் மரமாகக் கொண்டவன். அதனை வெட்டி வீழ்த்தியவன் சேரன் செங்குட்டுவன். இவன் பனம்பூ மாலை சூடிய பொறையன்.
பொறைய கேட்டருள் என்று மாடலன் கூறுகிறான்.
ஒப்புநோக்குக
பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர் 15
பல்இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி (பதிற்றுப்பத்து பதிகம் 5)
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment