நெடுஞ்செழியன் இறந்த பின் பாண்டிய நாடு
‘தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
‘மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை’ என-
பனந்தோட்டு மாலையுடன் தும்பைப் பூ மாலையும் அணிந்துகொண்டிக்கும் செங்குட்டுவன், வஞ்சி மாநகர வானவனாகிய செங்குட்டுவன் மாடலனை மேலும் வினவினான். பாண்டியன் இறந்த பின்னர் தென்னவன் நாடு என்ன செய்தது என வினவினான்.
மாடலன் கூறத் தொடங்கும்போது செங்குட்டுவன் மாடலனைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்றான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment