மாடலன் கங்கை ஆட வந்தான்
என் வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்;
மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!’ என-
மாடல மறையவன் செங்குட்டுவனிடம் கூறுகிறான்.
இப்படி என் வாயிலிருந்து வந்த சொற்களைக் கேட்டவர்கள் எல்லாம் இறந்துபோனதால், அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ளக் கங்கை ஆற்றில் நீராடலாம் என்று வந்தேன். இதுதான் என் வரவு - என்றான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment