கண்ணகியின் தந்தை மாநாய்கன் துறவு
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
கண்ணகியின் தந்தை மாநாய்கன் கடவுளர் எனப் போற்றப்படும் சமணத்துறவி கோலம் பூண்டு சமண மதத்தின் ஒரு பிரிவாகிய ஆசீவகர் தலைவன் முன் தோன்றி புண்ணிய தானம் செய்து, துறவறம் மேற்கொண்டான்.
இவ்வாறு மாடல மறையவன் செங்குட்டுவனிடம் கூறுகிறான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment