Pages

Thursday, 1 December 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 391-400

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 391-400
40 கல்வி
 
முகக்கண் இரண்டு
அகக்கண் எண், எழுத்து
கணக்கு, எழுத்து 

இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006


நல்லவற்றைத் தெளிவாய்க் கற்க நடந்திடுக நல்ல பாங்கில் 391
வெல்லும்கண் எழுத்தும் எண்ணும் 392 விளக்காகும் முகத்தின் கண்ணில் 393
வல்லவர்கள் புலவர் கூடில் மனங்கொண்டு பிரிதல் கல்வி 394
இல்லார்முன் உடையார் போல இரந்தேற்க கல்விச் செல்வம் 395

கல்வியது பெருக்கம் மென்மேல் கற்கின்ற அளவு மட்டே 396
கல்வியில் வல்லார்க் கெங்கும் காப்புண்டு 397 கற்றால் என்றும்
செல்வுழிச் சிறப்பு சேரும் 398 சேர்ந்தவர் இன்பம் காண்பர் 399
கல்வியே கேடில் செல்வம் கருதிப்பார் மற்ற வற்றை 400


திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

கற்க கசடறக் கற்பவை கற்றபின் \ நிற்க அதற்குத் தக. 391
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் \ கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு \ புண்ணுடையர் கல்லா தவர். 393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் \ அனைத்தே புலவர் தொழில். 394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் \ கடையரே கல்லா தவர். 395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் \ கற்றனைத் தூறும் அறிவு. 396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் \ சாந்துணையுங் கல்லாத வாறு. 397
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு \ எழுமையும் ஏமாப் புடைத்து. 398
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு \ காமுறுவர் கற்றறிந் தார். 399
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு \ மாடல்ல மற்றை யவை. 400

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்


No comments:

Post a Comment