Pages

Thursday, 1 December 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 381-390

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 381-390
39 இறைமாட்சி



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

படைகுடிகூழ் அமைச்சு நட்பால் பாதுகாப்(பு) உடையான் வேந்தன் 381
உடையாநெஞ்(சு) ஈகை ஊக்கம் உற்றறிவு தானே பெற்றான் 382
உடையானாம் துணிவு கல்வி ஒருபோதும் சோரா தாள்வான் 383
உடையாத அறமா னத்தால் ஓங்கற அரசே மாட்சி 384

பெருக்கியே கூட்டிக் காத்துப் பிரித்தலும் 385 எளிமை 386 இன்சொல்
உருக்கியே உதவல் 387 நீதி உடையவன் இறைவன் மன்னன் 388
நெருக்கியே திட்டினாலும் நெஞ்சினால் நிழலை நேர்வான் 389
கருக்கல்போல் கொடையும் அன்பும் காப்பாற்றும் குடியும் செங்கோல் 390


திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் \ உடையான் அரசருள் ஏறு. 381
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் \ எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் \ நீங்கா நிலனாள் பவர்க்கு. 383
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா \ மானம் உடைய தரசு. 384
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த \ வகுத்தலும் வல்ல தரசு. 385
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் \ மீக்கூறும் மன்னன் நிலம் 386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் \ தான்கண் டனைத்திவ் வுலகு. 387
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு \ இறையென்று வைக்கப் படும். 388
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் \ கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் \ உடையானாம் வேந்தர்க் கொளி. 390

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment