Pages

Thursday, 1 December 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 361-370

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 361-370
37 அவா அறுத்தல்



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

ஆசை விதையால் பிறவிவரும் 361 அதனைப் போக்க ஆசைவிடு 362
பேசில் சிறந்த செல்வமது பேரா ஆசை விட்டொழித்தல் 363
மாசில் தூய்மை அவாஇன்மை மலரும் வாய்மை வேண்டுவதால் 364
நேச ஆசை இல்லாமை நெறியில் தலைமை நிலையினதாம் 365

அஞ்சி அறத்தில் நின்றாலும் ஆசை வந்து கழுத்தறுக்கும் 366
பிஞ்சில் அறுத்தால் ஆசைபோம் 367 பேசும் துன்பம் அவர்க்கில்லை 368
மிஞ்சி இன்பம் தொடர்ந்துவரும் மேன்மேல் விரும்பின் துன்பந்தான் 369
விஞ்சும் ஆரா ஆசையினை வென்றால் பேரா இயற்கைநிலை 370

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் \ தவாஅப் பிறப்பீனும் வித்து. 361
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது \ வேண்டாமை வேண்ட வரும். 362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை \ ஆண்டும் அஃதொப்பது இல். 363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது \ வாஅய்மை வேண்ட வரும். 364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் \ அற்றாக அற்றது இலர். 365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை \ வஞ்சிப்ப தோரும் அவா. 366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை \ தான்வேண்டு மாற்றான் வரும். 367
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் \ தவாஅது மேன்மேல் வரும். 368
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் \ துன்பத்துள் துன்பங் கெடின். 369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே \ பேரா இயற்கை தரும். 370

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment