Pages

Wednesday, 30 November 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 351-360

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 351-360
36 மெய்யுணர்தல்



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

பொய்யாம் பிறப்பை மெய்யென்றால் பூக்கும் மாணாப் பிறப்பென்க 351
மெய்யாம் உணர்வால் மருளிருள்கள் விலகும் மாசில் காட்சிவரும் 352
மெய்யாய் ஐய நிலைநீங்கின் மேலாம் வானம் நண்ணிவரும் 353
மெய்யை உணர்க ஐயுணர்வால் 354 விளங்கிக் கொள்வ(து) அறிவாகும் 355

கற்றா ரெல்லாம் பிறவிநெறி களைய வாழ்வில் முயல்வார்கள் 356
உற்றுள் உணர்ந்தால் பிறப்பில்லை 357 உணர்ந்து கொள்க செம்பொருளை 358
பெற்ற சார்பு கண்டுணர்ந்து பேசா திருந்தால் நோயில்லை 359
மற்றைக் காமம் சினம்மயக்கம் வாரா திருந்தால் நோவில்லை 360

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

பொருளல்ல வற்றைப் பொருளென்(று) உணரும் \ மருளானாம் மாணாப் பிறப்பு. 351
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி \ மாசறு காட்சி யவர்க்கு. 352
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் \ வானம் நணிய துடைத்து. 353
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே \ மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் \ மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் \ மற்றீண்டு வாரா நெறி. 356
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் \ பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் \ செம்பொருள் காண்பது அறிவு. 358
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் \ சார்தரா சார்தரு நோய். 359
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன் \ நாமம் கெடக்கெடும் நோய். 360

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment