Pages

Wednesday, 30 November 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 341-350

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 341-350
35 துறவு


இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

விட்டு விட்ட எதனாலும் மேவும் துன்பம் இல்லாகும் 341
எட்ட வேண்டின் பயனெல்லாம் இன்னே துறவு பூண்டிடுக 342
சுட்டுப் போடு ஐம்புலனை 343 தூய நோன்பாம் துறந்திடுதல் 344
கட்டை உடம்பும் மிகையாகும் காணும் பிறவி அறுப்பார்க்கே 345

யான்மேல் எனதாம் என்னாமை எந்த உலகும் புகழ்கோளாம் 346
மேன்மேல் இடும்பை துறவாமை 347 வேண்டும் என்னும் வலைப்பட்டால் 348
தான்மேல் பிறவா நிலைமைவரும் சார்ந்தால் நிலையா மை தெரியும் 349
வான்மேல் பற்றை வைத்திடுக வந்து சேரும் பற்றின்மை 350

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் \ அதனின் அதனின் இலன். 341
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் \ ஈண்டுஇயற் பால பல. 342
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் \ வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை \ மயலாகும் மற்றும் பெயர்த்து. 344
மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்பறுக்கல் \ உற்றார்க்கு உடம்பும் மிகை. 345
யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு \ உயர்ந்த உலகம் புகும். 346
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் \ பற்றி விடாஅ தவர்க்கு. 347
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி \ வலைப்பட்டார் மற்றை யவர். 348
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று \ நிலையாமை காணப் படும். 349
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் \ பற்றுக பற்று விடற்கு. 350

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment