திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 331-340
34 நிலையாமை
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
நில்லாப் பொருளை நிலையென்பான் நினைவில் இருக்கும் புல்லறிவு 331
பல்லார் கூத்தைக் காணவரும் பாங்கில் செல்வம் வரும்போகும் 332
நில்லா இயல்பின் செல்வத்தால் நெஞ்சில் நிலைக்கும் செயல்புரிக 333
எல்லா நாளும் வாழ்நாளை ஈர்த்துள் அறுக்கும் வாள்கண்டோம் 334
சாகும் முன்னர் நல்வினைசெய் 335 சாவு வருநாள் தெரியாதே 336
போகும் முன்னர் மனம்கோடி பூக்க நாளைப் போக்காதே 337
ஏகும் உயிரும் உடம்பிருக்கும் எழும்பும் முட்டைக் குஞ்சைப்போல் 338
நோகா உறக்கம் விழிப்பைப்போல் 339 நொடிக்கும் வாழ்க்கைக்(கு) எதுபுக்கில்? 340

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் \ புல்லறி
வாண்மை கடை. 331
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
\ போக்கும் அதுவிளிந் தற்று. 332
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
\ அற்குப ஆங்கே செயல். 333
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் \ வாளது
உணர்வார்ப் பெறின். 334
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
\ மேற்சென்று செய்யப் படும் 335
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் \ பெருமை
உடைத்துஇவ் வுலகு. 336
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப \ கோடியும்
அல்ல பல. 337
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே \
உடம்பொடு உயிரிடை நட்பு. 338
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி \ விழிப்பது
போலும் பிறப்பு. 339
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
\ துச்சில் இருந்த உயிர்க்கு. 340
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment