திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 321-330
33 கொல்லாமை
![]() |
| கொலை \ கோறல் |
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
கொல்லான் உயிரை அறநெறியான் 321 கொடுத்துப் பகுத்துண்(டு) உயிர்காப்பான் 322
கொல்லா மைக்குப் பின்னைஅறம் கூறல் வாய்மை எனக்கொள்க 323
நல்லா(று) என்ப கொல்லாமை 324 நாடும் நீத்தார்க்(கு) அதுதலைக்கோள் 325
கொல்லா(து) இருப்பான் வாழ்நாள்மேல் கூற்றின் கொடுமை செல்லாதாம் 326
தன்னைக் கொல்வான் வந்தாலும் தான்முன் உயிரைக் கொல்லற்க327
மன்னும் செல்வம் கொலைதந்தால் வாழாக் கடையாம் சான்றோர்க்கே 328
துன்னும் கொலையே புலைவினையாம் தோன்றும் பயனைத் தெரியுங்கால் 329
இன்னும் கொலைஞர்க் குடலுயிர்ஏன் இருப்பின் எதற்கோ கொலைத்தொழிற்கோ 330

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் \ பிறவினை
எல்லாந் தரும். 321
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
\ தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் \ பின்சாரப்
பொய்யாமை நன்று. 323
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
\ கொல்லாமை சூழும் நெறி. 324
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
\ கொல்லாமை சூழ்வான் தலை. 325
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
\ செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
\ இன்னுயிர் நீக்கும் வினை. 327
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
\ கொன்றாகும் ஆக்கங் கடை. 328
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் \ புன்மை
தெரிவா ரகத்து. 329
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
\ செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment