திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 311-320
32 இன்னா செய்யாமை
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
சிறப்பாம் செல்வம் பிறர்க்கின்னா செய்யா திருந்தால் சேர்ந்துவரும் 311
கறுத்துத் துன்பம் செய்தாலும் கருதித் துன்பம் செய்யற்க 312
திறத்தால் துன்பம் செய்யார்மேல் செற்றா லும்மே மன்னிக்க 313
குறித்துச் செயினும் பொறுத்தவர்க்குக் கூடும் நன்மை செய்திடுக 314
பிறர்தம் துன்பம் தனதென்று பேணா அறிவால் என்னபயன் 315
அறிந்த துன்பம் செய்யற்க 316 ஆர்க்கும் என்றும் எண்ணற்க 317
செறிந்துள் உணர்ந்தும் மன்னுயிர்க்குச் செய்தல் என்கொல்? 318 முன்செய்யின்
மறிந்து திரும்பும் நோயெல்லாம் 319 மற்று முன்னைச் செய்தார்க்கே 320

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
\ செய்யாமை மாசற்றார் கோள். 311
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
\ செய்யாமை மாசற்றார் கோள். 312
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
\ உய்யா விழுமந் தரும். 313
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண \ நன்னயஞ்
செய்து விடல். 314
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் \ தந்நோய்போல்
போற்றாக் கடை. 315
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை \ வேண்டும்
பிறன்கண் செயல். 316
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
\ மாணாசெய் யாமை தலை. 317
தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ
\ மன்னுயிர்க்கு இன்னா செயல். 318
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
\ பிற்பகல் தாமே வரும். 319
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
\ நோயின்மை வேண்டு பவர். 320
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment