திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 301-310
31 வெகுளாமை
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
செல்லும் இடத்தில் காப்பதுவே சினத்தைக் காக்கும் முறையாகும் 301
செல்லா இடத்துச் சினம்தீது செல்லும் இடத்தும் பெருந்தீது 302
வல்லார் வெகுளி மடந்திடுக 303 வளர்க்கும் பகையை முகம்கொல்லும் 304
வல்லாய்த் தன்னைத் தான்காக்கில் வளரும் சினத்தை விட்டொழிக 305
சேர்ந்தார்க் கொன்று இனம்சுட்டு செல்லும் நெறியைச் சீரழிக்கும் 306
வாய்ந்த நிலத்தை அறைந்தால்கை வலிக்கும் சினத்தின் விளைவற்றே 307
தோய்ந்து வந்தால் முன்செய்த துன்பம் எண்ணி வெகுளற்க 308
மாய்ந்தால் வெகுளி வருமெல்லாம் 309 வந்தால் சினத்தால் செத்தாரே 310

![]() |
| இணர் எரி தோய்வு அன்ன இன்னா |
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
\ காக்கின்என் காவாக்கால் என். 301
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
\ இல்அதனின் தீய பிற. 302
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய \ பிறத்தல்
அதனான் வரும். 303
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் \ பகையும்
உளவோ பிற. 304
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
\ தன்னையே கொல்லுஞ் சினம். 305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
\ ஏமப் புணையைச் சுடும். 306
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு \ நிலத்தறைந்தான்
கைபிழையா தற்று. 307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் \ புணரின்
வெகுளாமை நன்று. 308
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
\ உள்ளான் வெகுளி எனின். 309
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் \ துறந்தார்
துறந்தார் துணை. 310
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:
Post a Comment