Pages

Wednesday, 30 November 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 291-300

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 291-300
30 வாய்மை



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

தீமை தாராச் சொல்வாய்மை 291 செயலில் நன்மை விளைவித்தால்
வாய்மை என்க 292 என்றாலும் மனத்தை மறைக்கின் பொய்கணாடாய் 293
தூய்மை உளம்சொல் ஒன்றானால் தோய்வர் உலகின் நெஞ்செல்லாம் 294
ஏமத் தானம் தவம்செய்வார் இரண்டாம் நிலையர் வாய்மைமுன் 295

பொய்யா திருந்தால் அறமெல்லாம் போற்றிப் புகழை உண்டாக்கும் 296
செய்யா அறமெல் லாம்சேர்க்கும் 297 தெண்ணீர் கழுவும் உடலைப்போல்
மெய்யாம் வாய்மை அகம்கழுவும் 298 விளக்காய் உதவும் சான்றோர்க்குப்
பொய்யா விளக்கை 299 யாம்கண்டோம் புகலும் வாய்மைக்(கு) ஈடில்லை 300

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் \ தீமை இலாத சொலல். 291
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த \ நன்மை பயக்கும் எனின். 292
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் \ தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் \ உள்ளத்து ளெல்லாம் உளன். 294
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு \ தானஞ்செய் வாரின் தலை. 295
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை \ எல்லா அறமுந் தரும். 296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற \ செய்யாமை செய்யாமை நன்று. 297
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை \ வாய்மையால் காணப் படும். 298
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் \ பொய்யா விளக்கே விளக்கு. 299
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் \ வாய்மையின் நல்ல பிற. 300

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment