திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 281-290
கள்ளாமை
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
எண்ணம் திருட்டில் பாயாதேல் எவரும் எள்ள மாட்டார்கள் 281
நண்ணிப் பிறர்தம் பொருள்வௌவேல் 282 நலித்த செல்வம் வளராது 283
திண்ணம் விளைவில் நீநாகும் 284 செல்வ அருளன்(பு) அவர்க்கில்லை 285
மண்ணில் ஆசைக்(கு) அளவில்லை மனத்தில் திருட்டு குடியிருந்தால் 286
களவு நெஞ்சே காரறிவு காணார் அளவின் ஆற்றலினை 287
அளவு நெஞ்சில் அறம்நிற்கும் ஆரா நெஞ்சில் களவேறும் 288
அளவில் லாத பொருள்திருடி அழிவர் அளவில் வாழாதார் 289
களவாம் திருட்டு உயிர்வாங்கும் கள்ளார் நல்லார் உலகுய்வர் 290

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
\ கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
\ கள்ளத்தால் கள்வேம் எனல். 282
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து \ ஆவது போலக்
கெடும். 283
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் \ வீயா
விழுமம் தரும். 284
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
\ பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
\ கன்றிய காத லவர். 286
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் \ ஆற்றல்
புரிந்தார்கண் இல். 287
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் \
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல \ மற்றைய
தேற்றா தவர். 289
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
\ தள்ளாது புத்தே ளுலகு. 290
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்
No comments:
Post a Comment