Pages

Tuesday 27 December 2016

நற்றிணை 317 Natrinai 317

நீண்டகன்ற மலைக்காட்டில் 
பெண்யானையோடு புணர்ந்த 
ஆண்யானையின் கை 
உயர்ந்து வளைவது போன்று 

நீண்ட இலைகளுக்கு இடையே 
கதிர் வாங்கி விளைந்திருக்கும் தினையைப், 
பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய கிளிகள் 
கவர்ந்து உண்ணும் 
உயர்ந்த மலைநாட்டினை உடைய தலைவனே! 

நீ விரும்புபவள் 
உன்னை விரும்பும் காதலை 
அவளது அன்னை அறிந்தால் 
அவள் நிலைமை என்ன ஆகும்? 

தன் தந்தையின் மலைச் சாரலில் இருக்கும் 
சுனையில் நீராடி, 
தோழிமாருடன் பறிக்கும் 
குவளை மலரின் இதழ் போன்ற 
அவளது கண்களில் 
பனிபோல் கண்ணீர் மல்குமல்லவா?

தோழி 
இவ்வாறு கூறித் 
தலைவனைத் திருமணம் 
செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை  5
அன்னை அறிகுவள் ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல் தானே எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?              10

தோழி, தலைமகனை வரைவு கடாயது.
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


உவமை

No comments:

Post a Comment