இராகு, கேது என்னும் புகைப் பாம்புகள் சேர்ந்து வாழ்வது போல, காண்போர்
பாராட்டும் மனைவி என்னும்படி, ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, தவிர்க்க முடியாத
இன்பம் எல்லாவற்றையும் கோவலனும் கண்ணகியும் துய்த்தனர். இளமையின் நிலையாமையைக்
கண்டுகொண்டவர் போல, இளமையைத் துய்த்தனர்.
பாடல்
தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து, - நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
வெண்பா
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment