தனிமனையில் பாராட்டத் தக்க வாழ்க்கை
பின்னர் ஒருநாள் கண்ணகியின் மாமியார் கண்ணகியும் கோவலனும் வாழத்
தனி இல்லம் ஒன்றை அமைத்துக்கொடுத்தாள். அவர்கள் ஒன்றி வாழ்வதையும், அறம்
செய்வதையும், விருந்தினர்களைப் பேணுவதையும், செல்வம் ஈட்டுவதையும் காண விரும்பி,
தனிவீட்டில் குடி வைத்தாள். அவர்களுக்கு உதவும் தோழி, பணியாளர் முதலான உரிமைச்
சுற்றத்துடன் வாழச் செய்தாள்.
கோவலனும் கண்ணகியும் ஒருசில ஆண்டுகள் உரிமையுடனும், மகிழ்வுடனும் காண்போர் பாராட்டும்
வண்ணமும் வாழ்ந்தனர்.
பாடல்
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என்.
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment