Pages

Tuesday, 29 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 2-7

காதல் மொழிகள்
குறை இல்லாத பொன்னே!
வலம்புரிச் சங்கு ஈன்ற முத்தே!
குற்றமற்ற நறுமணமே
கரும்பே!
தேனே!
அரும் பெறல் பாவாய்!
ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
நின்னை
மலையில் பிறக்காத மணி என்று சொல்வேனா?
கடலில் பிறக்காத அமிழ்தம் என்று சொல்வேனா?
உன் மொழியை யாழில் பிறக்காத இசை என்று சொல்வேனா?
தாழ்ந்த கூந்தலை உடையவளே!
என்று ஈர மொழிகளால் பாராட்டினான். கோதை அணிந்த கண்ணகியும், தார் அணிந்த கோவலனும் தழுவிக்கொண்டு மகிழ்ந்திருந்தனர்.
 
கடல் அலையில் அமிழ்தம் பிறக்கக் கடைதல்
பாடல்

மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்

புகார்க் காண்டம் \ 2. மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


No comments:

Post a Comment