அழகிக்கு ஒப்பனை வேண்டுமோ என்கிறான்
நல்ல மலர்லாலை அணிந்தவளே!
- உன் மார்பில் மங்கல அணி இருக்கிறதே! அது போதாதா? மற்ற அணிகலன்களை ஏன் பூட்டி வைத்திருக்கின்றனர்?
- கூந்தலில் சில பூக்கள் போதாவா? கட்டிய மாலையைச் சுற்றி வைத்திருப்பது ஏன்?
- கூந்தலில் நானம் (கஸ்தூரி), அகில் புகை ஊட்டியிருப்பது போதாதா? மானின் மதச் சாந்தை ஏன் மேனியில் அப்பி வைத்திருக்கின்றனர்?
- முலையில் நான் எழுதிய தொய்யில் போதாதா? முத்தாரத்தை ஏன் போட்டிருக்கிறார்கள்?
இவற்றால் உன் முகத்தில் வியர்வை முத்துக்கள் பூக்கின்றனவே! சிறிய
இடை தாங்கமுடியாமல் வருந்துகிறதே! இவற்றையெல்லாம் எதற்காக அணிவித்திருக்கின்றனர்?
என்ன கொடுமைப் படுத்தியிருக்கின்றனர்? – என்கிறான் கோவலன்.
பாடல்
நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நான நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment