Pages

Tuesday, 29 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 2-5

கண்ணகியின் சாயல், நடை, மழலை
  • மயில் உன் மேனி அழகில் தோற்றுக் காட்டுக்கு ஓடிவிட்டது. 
  • அன்னம் உன் நடை அழகில் தோற்று நீர் நிற்கும் வயலிலுள்ள பூவுக்கு ஓடிவிட்டது.
  • பாவம் நீ வளர்க்கும் பச்சைக்கிளி குழலும் யாழும் போன்ற உன் மழலைமொழி கேட்டு மயங்கி உன் கையை விட்டு நீங்காமல் இருக்கிறது.  

 
கையில் கிளி
பாடல்

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் நுதல்! மெல் நடைக்கு அழிந்து,
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசுங் கிளியே
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின: 

புகார்க் காண்டம் \ 2. மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


No comments:

Post a Comment