கண்ணகியின் உறுப்புகளைக் கோவலன் பாராட்டுகிறான்.
- பிறைநிலாவைத் தேவர்கள் போற்றும் வண்ணம் பெரியோனாகிய சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டு வளரச் செய்தார். (சிவபெருமான் மனைவி திருமகள். சிவபெருமான் சூடிக்கொண்டதால் திருமகளும் நிலாவும் உடன்பிறப்பு ஆயின.) அதனால், சிவபெருமான் தன் பிறைநிலாவை உனக்கு நெற்றியாகத் தந்திருக்கிறார்.
- வென்று வந்தவருக்கு அரசன் படைக்கலம் வழங்கிப் பாராட்டும் பழக்கம் உண்டு ஆகையால், உருவம் இல்லாத காமன் தன்னை வென்ற உனக்குத் தன் வில்லாகிய கரும்பை இரண்டு புருவங்களாக வழங்கியிருக்கிறான்.
- அமிழ்தம் கடையும்போது அமிழ்தம் தோன்றுவதற்கு முன்பு இந்திரன் எடுத்துக்கொண்ட வச்சிரப்படை தோன்றியதாகலின் அந்த வச்சிரப் படையை இந்திரன் உனக்கு இடையாக நல்கியிருக்கிறான்.
- அறுமுகக் கடவுள் முருகப்பெருமான் உன்னைப் பெறும் முறைமை இல்லாதவன் ஆதலாலே தன் வேலை உனக்கு இரண்டு கண்களாக வழங்கியிருக்கிறான்.
![]() |
| இந்திரன் கையில் வச்சிரப் படை |
பாடல்
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை
என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப் பா
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment