நிலா முற்றம்
தென்றலானது, வயலில் பூத்திருந்த கழுநீர், ஆம்பல், குவளை, தாமரை, அதன்
பக்கத்தில் சோலையில் பூத்திருந்த தாழை, மாதவி, சண்பகம் முதலானவற்றின் மகரந்தப்
பொடிகளை அள்ளிக்கொண்டு மகளின் முகத்தைத் தொடவேண்டும் என்னும் ஏக்கத்தோடு, தேன் உண்ணும்
வண்டுகளையும் சேர்த்துக்கொண்டு மாடத்தில் மாலை மாட்டி அழகுபடுத்தப்பட்டிருந்த
குறுகிய கண்களை உடைய சாரளத்தின் வழியே நுழைந்து, மணக்கும் வாயுடன் நுழைந்தது. அதனைக்
கண்டு மகிழ்ந்த கோவலனும் கண்ணகியும் மணக்கும்
மலர்க்காற்றும், வேனில் பருவமும் வீற்றிருக்கும், நிரைநிலை மாடத்தில்
அமைக்கப்பட்டிருந்த அரமியம் என்னும் நிலாமுற்றத்துக்கு ஏறிச் சென்றனர்.
பாடல்
கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,
வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங் கண் நுழைந்து,
வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,
புகார்க் காண்டம் \ 2.
மனையறம் படுத்த காதை
கி. பி.
இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:
Post a Comment