சினம் மிகுந்து வேலேந்திப் போரிட்டு, இமய
மலையில் தன் புகழ் மிக்க வேங்கைச் சின்னத்தைப் பொறித்த செம்பியன் தன் ஆட்சிச் சக்கரத்தைத்
தனக்கு நேர் யாரும் இல்லாமல் உருட்டுவானாகுக என வாழ்த்துவோம்.
பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா \ சுரிதகம்
இப்பால் இமயத்து இருத்திய
வாள் வேங்கை
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா
எப்பாலும்
செரு மிகு சினம்
வேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன்
எனவே.
1 \
மங்கல வாழ்த்துப் பாடல் \
திருமணத்தை வாழ்த்தும் பாடல் \
அரசனை வாழ்த்திப் பாடலை முடித்தல்
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள்
பாடல்
![]() |
| இந்தக் காசில் வில் புலி இணைகயல் ஆகிய மூன்று ஆட்சிச் சின்னங்கள் உள்ளன. புலி சோழர் சின்னம். செம்பியன் புலிச் சின்னத்தை இமயமலையில் போர் வெற்றியின் அடையாளச் சின்னமாகப் பொறித்தான் |


No comments:
Post a Comment