Pages

Thursday, 17 November 2016

சிலப்பதிகாரச் சிறப்பு Excellence of Silappatikaram

சிலப்பதிகாரம் ஒரு சிறந்த காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • தமிழ்நாட்டில் நிகழ்ந்தது
  • மூவேந்தரையும் போற்றுகிறது
  • புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூவேந்தர் தலைநகரங்களிலும் நிகழ்ந்தது.
  • வடநாட்டுப் போர் வெற்றியைக் காட்டுகிறது
  • இமயமலையில் சோழன் புலி பொறித்தது, சேரன் வில் பொறித்து ஆகிய நிகழ்வுகளைச் சொல்கிறது
  • இலங்கை அரசன் கயவாகுவைக் குறிப்பிட்டுத் தமிழ் இலக்கியங்களின் காலத்தை வரையறுக்க உதவுகிறது

முத்தமிழ்க் காப்பியம்
  • வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு வகைப் பாடல்களையும் கொண்டுள்ள இயல்-தமிழ் இலக்கியம்
  • பாடல், எழால், பண், பாணி, முதலான இசைப்பாடல்களை கொண்டுள்ளது.
  • கானல் வரி, வேட்டுவ வரி, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, துன்பம் (மாலை), வழக்குரை (காதை), வாழ்த்து (காதை) என்னும் நாடகப் பகுதிகளைக் கொண்டது 

சமயப் பொது நூலாக விளங்குகிறது. ஆய்ச்சியர் குரவையில் திருமால் வழிபாட்டையும், குன்றக் குரவையில் கொற்றவை வழிபாட்டையும், காவுந்தி அடிகள் உரை வாயிலாகச் சமண நெறியையும் போற்றுகிறது  

கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:

Post a Comment