Pages

Thursday, 17 November 2016

நற்றிணை Natrinai 207

தலைவன் தேரில் வந்திருக்கிறான். தலைவி மீன் பிடிக்கும் சிறுவர்களோடு விளையாடிக்கொண்டடிருக்கிறாள். தோழி கவலையோடு சொல்கிறாள்.


கண்டல் மர வேலியும், உப்பங்கழியும் சூழ்ந்து, முண்டகப் புல்லால் வேயப்பட்ட குடிசைக்கு மீன் வாங்கப் பலரும் தேர்வண்டியில் வருகின்றனர். 

அவரும் (தலைவனும்) குன்று போல் குவிந்திருக்கும் மணலைக் கடந்து வந்திருக்கிறார். 

அவர் இவளை (தலைவியை)ப் பெறாமல் திரும்ப நேர்ந்துவிடுமோ? 

நாள்தோறும் இளையவர்களும், முதியவர்களும் சுற்றத்தாருடன் சென்று சுறா மீனைப் பிடிக்கின்றனர். 

முதிர்ந்து நரைத்த முடி கொண்ட பரதவரின் குறுமகள் இவள். 

கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல் மடமை பேசுபவள். 

பெரியவர்கள் சுறா மீன் பிடிப்பதைப் பார்த்துச் சிறுவர்கள் வலையையும், தூண்டிலையும் எடுத்துக்கொண்டு திரை முழங்கும் கடல்பக்கம் சென்றுள்ளனர். 

இவளும் சிறுவர்களுக்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறாளே? 

அவர் இவளைப் பெறாமல் திரும்ப நேருமோ?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி 5
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் 10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.

நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இது கி.மு. காலத்துப் பாடல்.


மீனவர் 

No comments:

Post a Comment