Pages

Thursday, 17 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 1-4

1 \ மங்கல வாழ்த்துப் பாடல் \ திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ கோவலன்
அதுபோலவே, மாசாத்துவான். பெருநிலம் முழுவதையும் ஆளும் பெருமகனான அரசனுக்கு மேம்பட்ட தனிப்பெருங் குடிகளோடு உயர்ந்து ஓங்கிய செல்வம் படைத்தவன் இந்த மாசாத்துவான். சாத்து = கூட்டமாக நிலவழியே வெளியூர் வாணிகம் செய்யும் கூட்டம். \ மா சாத்து ஆன் = பெரிய நில வணிகன் தனக்கு வரும் நிதியத்தைப் பிறருக்கு வழங்குபவன். பெரு நிதிக்கு உரியவனாகிய இந்த மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் 16 ஆண்டு அகவை கொண்டவன்.
இவன் தன் புகழாலே மண்ணின் வளத்தை மங்கச் செய்தவன். மதியம் போன்ற முகமும், பண்ணிசையைத் தேய்த்த புகழும் கொண்ட மகளிர் ஆயம் கண்டு ‘செவ்வேள்’ என்று போற்றிப் பாராட்டும் காதல் புகழைப் பரப்பும் உரிமை பூண்டவன். ‘கோவலன்’ என்பது அவன் பெயர். கோவலன் என்பது கண்ணன் பெயர்களில் ஒன்று
பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

ஆங்கு,
பெரு நிலம் முழுதாளும் பெரு மகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு நிதி கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்
அவனும் தான்
மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ.


கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

No comments:

Post a Comment