Pages

Wednesday, 16 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 1-3

1 \ மங்கல வாழ்த்துப் பாடல் \ திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ கண்ணகி \ காப்பியத் தலைவி என்பதால் முதலில் கூறப்படுகிறாள்.

நாடு நலமுடன் இருந்தது. அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது. அந்தப் புகார் நகரில் மாநாய்கன் என்னும் கடல் வணிகன் வாழ்ந்துவந்தான். அவன் வானம் மழை பொழிவது போல் கொடை வழங்கும் கையை உடையவன். அவன் குலக்கொம்பு (மகள், குலக்கொடி என்னாது குலக்கொம்பு என்றது இவளால் குடிப்பெருமை உயரப்போவது பற்றி) கண்ணகி. அவள் வானில் பூத்திருக்கும் கொடி போன்றவள். 12 ஆண்டு பருவப் பெண்.
மாதர் அனைவரும் வணங்கி வாழ்த்தும் பெருமை மிக்க குணம் படைத்தவள், அவள்.. திருமகள் வடிவம் இவள் வடிவம் என்றும், கற்பில் களங்கம் இல்லாது வடமீனாய் விளங்கும் அருந்ததியின் திறம் இவள் திறம் என்றும் மகளிர் இவளைப் போற்றினர். கண்ணகி = கண் நகி = புன்னகை பூக்கும் கண்ணை உடையவள்.  
 
கண்ணகி \ ஆரையம்பதி கோயில்
பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

அதனால்,     
நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார்நகர் அது தன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகை வான் கொடி அன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்,
அவளும்தான்,         
போதில்ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்''
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்''
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்''
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ'',

முன் பகுதி
பின் தொடர்ச்சி
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்


No comments:

Post a Comment