1 \ மங்கல வாழ்த்துப் பாடல்
\ திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ நாட்டு நலம்
இப்படிச் சோழனைப் போலத் திங்கள், ஞாயிறு,
மழை ஆகியவை உதவுவதால், தென் திசைப் பொதியமலையில் ஆயினும், வட திசை இமயமலையில் ஆயினும்,
குடிபெயர்ந்து அறியாத பழங்குடிகள் கெழுமி ஒப்புரவுடன் பழங்குடி மக்கள் வாழும் தனக்கு
நிகர் இல்லாத புகார் நகரம் ஆயினும், எல்லா இடங்களிலும் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தார்களே
அல்லாமல், அடிமைகளாக யாரும் வாழவில்லை. உயர்ந்தவர்களாகவும், முழுமையாகக் கேட்டு நடக்கும்
பாங்குள்ளவர்களாகவும் வாழ்ந்தனர்.
பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
ஆங்கு,''
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதி எழு அறியாப்
பழங்குடி கெழீஇய
பொது அறு சிறப்பின்
புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந்
தோரே.

No comments:
Post a Comment