உடுக்காமலும்,
உண்ணாமலும்,
தன் உடம்பை வருத்தியும்,
பொருளைக்கொண்டு நல்ல அறச்செயல்களைச் செய்யாமலும்,
பிறருக்குக் கொடுக்காமலும்,
சேமித்து வைத்துக்கொண்டே இருப்பவர்
ஒருநாள் அதனை இழந்துவிடுவார்.
தன் உடம்பை வருத்தியும்,
பொருளைக்கொண்டு நல்ல அறச்செயல்களைச் செய்யாமலும்,
பிறருக்குக் கொடுக்காமலும்,
சேமித்து வைத்துக்கொண்டே இருப்பவர்
ஒருநாள் அதனை இழந்துவிடுவார்.
பூவிலிருந்து கொண்டு போய்த்
தேனைச் சேமித்து வைத்திருக்கும் தேனீக்களே
‘இழப்பர்’ என்பதற்குச் சான்று.
பாடல்
உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல் அறமும் செய்யார், கொடாஅது
வைத்து ஈட்டினார் இழப்பர்; வான் தோய் மலை நாட!
உய்த்து ஈட்டும் தேனீக் கரி.
பத்து - செல்வம் நிலையாமை
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்
![]() |
| தேனீ |

No comments:
Post a Comment