Pages

Sunday 13 November 2016

அகநானூறு Agananuru 398

காதலி தனிமொழி


காதலன் மலையிலிருந்து வரும் ஆற்றோடு காம உணர்வுகளை காதலி வெளிப்படுத்துகிறாள்.

1

என் அணிகலன்கள் கழலும் துன்பம் மிகுகிறது. 
அதனால் அவரை நினைந்து என் நெஞ்சம் பிணக்கிக்கொள்கிறது. 
தோள் மெலிந்து தளர்கிறது. 
கொன்றைப் பூக்கள் நிலத்தில் கொட்டிக் கிடப்பது போல் மேனியில் பசலை நோய் படர்ந்துள்ளது. 
நெற்றியும் பசந்துள்ளது. 
அவனது அருள் இல்லாமல், இந்த நிலையில் நான் இங்கே கிடக்கிறேன்.

அவன் மலையிலிருந்து வந்து பாயும் ஆறே!
உன் மலைக்காரன் செய்த கொடுமையை எண்ணி ‘இம்’ என்னும் ஒலியுடன் அழுதுகொண்டு மழை வெள்ளமாக வருகிறாயா? 

என்னைப் பார்த்துவிட்டு, மேலும் செல்கிறாயா? 
நன்று நன்று உன் செயல்! 
நீயே இப்படிச் செய்தால், உன் குன்றத்தை உடைய அவன் என்னென்ன செய்யமாட்டான்?

2

கரை புரண்டு வரும் ஆற்று வெள்ளமே! நீயே சொல் என வினவுகிறேன். என்றாலும் உன்னோடு பிணக்கிக்கொள்ள அஞ்சுகிறேன். 

நீதான் அவன் செய்த கொடுமையை எண்ணி நாணி, அவன் மலையில் கிடக்கும் மலர்களால் உன்னைப் போர்த்திக்கொடு செல்கிறாயே. 

உன்னை என்னிடம் செல்லும்படி விட்டுவிட்டு, அறம் இல்லாமல் என்னைத் துறந்து செல்லும் வல்லமை உடையவனாக அவன் இருக்கிறானே. 

உறவோ பகையோ இல்லாத நொதுமல் மக்கள் உன்னைப் போலத்தான் இப்படிக் கண்டும் காணாமலும் கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாமல் நடந்துகொள்வார்கள்.   

3

தீ எரிவது போல் கிளைகளைக் காட்டிக்கொண்டிருக்கும் வேங்கை மரம் மழையில் பூத்துக் குலுங்குவது போல நீ உன் வெள்ளத்தால் தழைக்கச்செய்யக் கூடாதா? ஆரியர் வாழும் பொன்படு நெடுவரையாகிய இமயம் போல் திகழும் என் தந்தையின் கானத்தில், பல்வகைப் பூக்கள் பூத்துக் குலுங்கும்படி நீயாவது தங்கிச் சென்றால் குறைந்தா போய்விடுவாய்?
  • நந்தல் = தழைத்தல்

4

புலியோடு போராடிய யானை புண் பட்ட வருத்தத்துடன், தன் பெண்யானையைத் தழுவிக்கொண்டு, வலிமை குன்றிய நிலையில், மூங்கில்கள் வளைந்து உரசி ஒலிப்பது போல், முழங்கும் அவர் மலையிலிருந்து வரும் ஆறே! தங்கிச் செல்லக்கூடாதா?
 


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி
1
''இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,   5
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?        10
2
கரை பொரு நீத்தம்! உரை'' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, 15
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
3
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்   20
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
4
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!             25

காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது.
இம்மென்கீரனார் பாடல்
பாடலில் இம்மென்று, என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளமையால் இவர் இம்மென்கீரனார் என்னும் பெயர் பெற்றுள்ளார்.

கி.மு. காலத்துப் பாடல்

He leaves her when he goes on earning in distant place. 
She in her feeling of lust speaks with the river coming from his mount.

My ornaments are in loose in my body when I think and blame his deed. 
My shoulder is learning. 
My complexion feels sick becoming yellow in color as Kontrai-flowers. 
My forehead also feels same sickness. I am here without his grace.

You, the river coming from his mount! I think you are crying in ‘Im’ sound; and flow showing tears with the feeling of shame for his mercy-less deed, veiling over your body with flowers of his mount. 

If he behaves like this, what else he cannot do wrong in future? 
I cannot blame you because; it is the nature of the people who is not relative, friend or enemy behaving mercy-less.

Why can’t you stay here and fertilize the garden of my father as the forest in Himalayas the abode of the people of Arias?    

It is the forest you are coming from where the male elephant wounded in fight with tiger moves hugging with its female. 
It is moving with a sighing sound as bamboos scratching in wind in the forest. 
Why can’t you fertilize my landscape?



No comments:

Post a Comment