Pages

Sunday 13 November 2016

அகநானூறு Agananuru 397

மாயோள்


நான் என் மகளின் மடமைக் குணத்தைப் பாராட்டும்படியும், தாய் தன் குடிப்பெருமைக்கு ஏற்பத் தன் கடமையை நிறைவேற்றும்படியும், விடியற் காலத்தில் முழவு முழங்க, விழாக் கோலத்துடன் இந்த இல்லத்தில் திருமணம் செய்துகொள்ளாமல், தான் விரும்பும் காளையுடன் என் மகள் சென்றுவிட்டாள். 

கல் வெடிக்கும் அளவுக்கு மழை இல்லாமல் போன காட்டுச் சோலையைக் கடத்தல் எளிது என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டாள். 

என் மகள் கொடி போல் படரக்கூடியவள். 

பொம்மிய அல்குல் கொண்டவள். 

இவளை அழைத்துச் செல்ல இந்தக் கொடிய கோடைக்காலம் பொருந்தாது என்று எண்ணாமல் துடிக்கும் உணர்வு கொண்ட காளையாகிய அவளது காதலன் துணிவுடன் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆண்யானை பொரிந்த அடிமரம் கொண்ட ஓமை மரத்தைக் குத்தி அதன் பட்டையை உரிக்கும். 
பட்டை பொளிந்திருக்கும் ஓமை மரம் சிவப்பு நிறத்துடன் ஊன் துண்டம் போலத் தோற்றம் அளிக்கும். 
ஊன் துண்டத்தை உண்ணலாம் என்று பருந்து அந்த மரத்துக்ககு வந்து காத்திருக்கும். 

புல்லிய இலையை உடைய பெருமூங்கில் நெல் கோடைக்காற்றால் உதிர்ந்துகிடக்கும். 

இப்படிப்பட்ட காட்டில் அவன் என் மகளைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான். 

– இப்படிச் சொல்லிக்கொண்டு செவிலித்தாய் கலங்குகிறாள்.
 




பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
மணன் இடையாகக் கொள்ளான், ''கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்  5
எளியவாக, ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு'' எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன் மன்ற துனை வெங் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,            10
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
கோடை வெவ் வளிக்கு உலமரும்        15
புல் இலை வெதிர நெல் விளை காடே.

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
கயமனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

Fostering-mother feels about her daughter eloped.

I shall praise my daughter’s innocent character; her mother performs ceremonies suitable to her dignity; band music of good omen will arise early morning. 

Without getting her marriage here in such a way, she eloped with her lover, a boy friend like a bull. 

It is hot summer at present so as to rocks flaw in hot. 

He and she didn’t care about the in-suitable season to travel. 

Her love is as strong as to elope along with him.

The forest route they are passing is so bad that eagles wait on trees to eat the false-meet that the trunk of the Omai-tree appears red in color having the skin peeled by the tusk of a male elephant. 
The bamboo-paddies will fall on ground by western wind. 

He fetched my daughter through such a dangerous arid forest.


No comments:

Post a Comment