Pages

Saturday, 12 November 2016

அகநானூறு Agananuru 396

வடவரையில் வில் பொறித்தவன் வஞ்சி  


பரத்தை ஒருத்தி தன்னிடம் வந்த தலைவன் பிரியும்போது தடுத்து நிறுத்திச் சொல்கிறாள்.

1

என்னிடம் மகிழ்ச்சி கண்டவனே! 
உன்னைத் தடுத்து நிற்கிறேன்.

அரசன் நன்னன் புனல் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான் என்று ஆய்-எயினன் என்பவன் புனல்-நாட்டு மக்களை “அஞ்சவேண்டாம்” என்று கூறிக்கொண்டு நன்னனின் படைத்தலைவன் மிஞிலி என்பவனைப் பாழி என்னுமிடத்தில் தாக்கிய ஆய் எயினன் தன் உயிரைப் புனல்நாட்டு மக்களுக்குக் கொடுத்தான்.
  • நன்னன் – பொன்னாலான பூண் அணிந்தவன்
  • பாழி – தெருவில் யாழிசை கேட்கும் ஊர்
  • மிஞிலி – நன்னனின் படைத்தலைவன், எதிர்த்துத் தாக்கும் கலையில் வல்லவன்
2

நீயோ, சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரை அழிக்கும் தெய்வத்தின் முன் நின்றுகொண்டு என் முன்கையைப் பற்றி “உன்னைப் பிரியமாட்டேன்” என்று உறுதிமொழி கூறினாய். 
அந்தச் சொல்லை மீறி இப்போது உன் மார்பை எனக்குத் தரவில்லை. மற்றொருத்திக்குத் தருகிறாய்.

3

இங்கு வந்துவிட்டாய். 
இனி நான் உன்னை விடமாட்டேன்.

ஆதிமந்தி கண்ணீர் விட்டுக்கொண்டு கதறும்போது, போர்த்திறம் மிக்க அத்தியின் நீராட்டுக் கலையில் மயங்கி நெடுந்தொலைவிலிருந்து வந்து நீர் பாயும் காவிரி இழுத்துச் சென்று \ காவிரி என்பவள் இழுத்துச் சென்று ஒளித்துக்கொண்டது போல, உன் மனைவி உன்னை இழுத்துச் செல்வாளோ என்று அஞ்சுகிறேன்.

4

(செங்குட்டுவன்) சினம் கொண்டு ஆரியர்களை அலரும்படித் தாக்கி, பழமையான வடமலை இமயத்தில் தன் வளைந்த வில் சின்னத்தைப் பொறித்தான். 

நீ பிரிந்து செல்வதாயின், வில் பொறித்தவனின் தலைநகரம் வஞ்சி போன்ற என் அழகினை, திரும்பத் தந்துவிட்டுச் செல்க.

 
 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  மருதம்

1
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
''அஞ்சல்'' என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,       5
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
2
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;         10
3
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,          15
4
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!

காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The concubine stops her client returning to his house and says.

You are a man enjoy bliss in me. 
I stop you returning to your house. 

King Nannan annexed PunalNadu portion into his region. 
To remove the sufferings of the people in the annexed portion King AyEyinan tried assuring the people “Don’t worry”. 

In the war AyEyinan last his life. 
Captain Minjli of the King Nannan killed him at the warfield, Pali.
King AyEyinan could not keep his words winning.

You, the lust-monger assured me before the God “I will not leave you”. 
But, you are leaving me. 
You are going again to hug another girl, you want.

You have returned her again; and so I shall not let you again to even to your own house to enjoy your wife.

Leaving the real lover AtiManti, the girl Kavery pulled away the man AttanAtti, a swimming artist, in course of running water in River Kavery, to enjoy him. 

This is a historical event. 

I am afraid of your wife pulling you to your house. 
I don’t let even your wife do so.

King Senguttuvan treads Arias Kings; and curved his royal emblem bow on the rock of Himalayas. 

His capital is Vanji. 
My beauty was like this city. 
If you want to leave me please return my beauty and go as you like.

No comments:

Post a Comment