Pages

Saturday, 12 November 2016

அகநானூறு Agananuru 395

தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.


இங்கே, கண்ணீர் மழை பொழியும் இவள் கண், மழையில் நனையும் குவளை மலர் போல உள்ளது. 
இந்தத் துன்பம் தீர, அவர் வந்தால் நல்லது.

தோழி!

நிழலோ, நீரோ இல்லாத நிலப்பரப்பில் சூடு பறக்கும் புல்லை மேய்ந்துவிட்டு கானல் நீரை உண்ண ஓடி நீரைப் பெறமுடியாமல் ஆண்மான் தன் பெண்மானை அழைக்கும் அவலக் குரல் ஆளின் குரல் போல் கேட்கும் வழியில் அவர் செல்கிறார். 
ஞெமை, வெதிர் மரங்கள் நிறைந்த காடு அது.

தண் கயம் = 
குளிர்ந்த குளம்

பயந்த = 
பெற்று வளர்க்கும்

வண் காற் குவளை = 
வலிமையாகக் காலூன்றிய குவளை

மாரி மா மலர் = 
மழை பொழியும் காலத்து மலர்

பெயற்கு ஏற்றன்ன = 
மழையைத் தாங்கிக்கொண்டு நிற்பது போல

நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் = 
நீரைக் கொட்டிப் போராடிக்கொண்டிருக்கும் இவள் கண்

பனி வார் எவ்வம் தீர = 
பனி பொழியும் துன்பம் தீர

இனி வரின் = 
இனியாவது வந்தால்

நன்றுமன் வாழி, தோழி = 
நல்லது. இதைக் கேள் தோழி

தெறு கதிர் = 
காய்ச்சும் வெயிலில்

ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை = 
ஈரம் நைந்துபோன, நீர் அற்றுப்போன திசைப்பரப்பில்

அழல் மேய்ந்து உண்ட = 
தீப் பறக்கும் புல்லை தேய்ந்து தின்ற

நிழல் மாய் இயவின் = 
நிழல் மாண்டுபோன காட்டுப் பாதையில்

வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை = 
வறண்ட மரக்கிளை போல் கிளைத்த கொம்புகளை உடைய அழகிய ஆண்மான்

அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி = 
நீரோடும் ஆற்றுமணல் போல் தோன்றும் தேய்த்தேர் என்னும் கானல் நீரை விரும்பி ஓடி

புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு = 
தவித்துச் சுழலும் உள்ளத்தோடு

மேய் பிணைப் பயிரும் = 
மேயும் தன் பெண்மானை அழைக்கும்

மெலிந்து அழி படர் குரல் = 
மெல்லிய துன்பம் நிறைந்த குரல்

அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் = 
செல்வதற்கு அரிய காட்டு வழியில் செல்லும் ஆளின் குரல் போலக் கேட்கும்.

திருந்து அரை ஞெமைய = 
திருந்தும் நிழல் கொண்ட ஞெமை மரம் இருக்கும்

பெரும் புனக் குன்றத்து = 
பெரிய புனக்காட்டில்

ஆடு கழை இரு வெதிர் நரலும் = 
ஆடும் பெருமூங்கில் உரசிக்கொள்ளும் ஒலி கேட்கும்

கோடு காய் கடற்ற காடு இறந்தோரே = 
மலையே காய்ந்து கிடக்கும் காட்டில் அவர் சென்றுள்ளார்.

 


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் 5
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,    10
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!                15

பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The friend-maid consoles her lady with these words.

You are here with tears in eyes as the water lily flowers are shedding water drops in rain. 

To remove your mental agony, it is better, if he will present by this time.

You, my lady-friend, we have to consider his position; he is passing throw the route where male antelope eats grass in hot; to remove its thirsty it will run after the mirage in vain; and call its female with its weeping voice that hears as a man’s voice in distress. 

It is an arid forest with Njemai and bamboo trees moving by wind with noise.


No comments:

Post a Comment