Pages

Friday, 11 November 2016

அகநானூறு Agananuru 394

திருமண விழாவில் பால்சோறு


திருமண விழாவில் உன் மனைவி பாற்சோறு ஊட்ட, 
நீ உண்ண, 
எங்களது இல்லத்துக்கு வருக, 
என்று தோழி தன் தலைவியின் காதலனை அழைக்கிறாள்.

1

களாப்பழம் புளித்து இனிக்கிறது. 
விளாம்பழம் பழுத்திருக்கிறது. 

சிறிய தலையை உடைய செம்மறி ஆட்டுப் பால் பழுப்பு நிறம் ஏறித் தயிராக விளைந்திருக்கிறது. 

இதமான புனத்தில் விளைந்த வரகரிசி அவலில் (அவைப்பு) கார் காலத்தில் புற்றிலிருந்து பறக்கும் ஈசலைப் பிடித்துப் போட்டுச் சமைத்த புளிப்பொங்கல் இருக்கிறது. 

பசுமாட்டு (சேதான்) வெண்ணெய் இருக்கிறது. 

அதனை உருக்கிய நெய்யை ஊற்றி உன் இளையர் (காவல்தோழர்) உண்ணலாம். 

அதன் பின்னர், நீயும் பாற்சோறு உண்ணலாம். 

முள் வேலி இடப்பட்டிருக்கும் பந்தலில், குட்டையான கால் நட்டுப் போட்டிருக்கும் போட்டிருக்கும் பந்தலில், புதுப்பானை போல் செம்மண் தீட்டி அழகுபடுத்தப்பட்டுள்ள பந்தலில், உன் மனையோள் (திருமணத்துக்குப் பின்னர் உன் மனைவி) விழா விருந்து படைக்க, பாலும் சோறும் உண்ண நீ ஒருநாள் வரவேண்டும். 

கொடைவளம் படைத்த கோமானே! 
எம் இல்லத்துக்கு ஒருநாள் வந்துசெல்வாயாக.
(திருமணம் செய்துகொள்வதற்காக)

2

காட்டில் ஆடு மேய்க்கும் இடையன் தன் ஆடுகளை அழைக்க, விரலை மடித்து வாயில் வைத்து, வீளை ஒலி எழுப்புவான். 

அதனைக் கேட்டுக் குட்டி முயல்கள் மன்றத்தில் ஓடிப் புதரில் ஒளிந்துகொள்ளும். 

இப்படிப்பட்ட முல்லை நிலத்தில்தான் எங்களது நல்ல சிற்றூர் இருக்கிறது. (திருமண ஒலி எழ ஊராரின் அலர் அடங்கும் என்பது உள்ளுறை)

 

  






பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  முல்லை

1
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு 5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,       10
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
2
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்  15
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.

இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது.
நன்பலூர்ச் சிறுமேதாவியார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The friend-maid calls the hero lover of her lady to marry her in her house.

Fruits Kala ripe; wood apples are also ripe. 
The milk of the sheep is made into curd in light brown. 
Tamarind rice cooked with winged white ants is ready. 
Butter made in cow-milk is ready. 
The ghee made from that butter is also ready to pour in food. 
You can eat rice food adding milk in the marriage ceremony, feed by your wedding wife. 

See there. 
There is a house thatched on short wooden pillar. 
The house is adorned as pot with art used in ceremony. 
You, my lord, you must come there one time to eat ceremonial eating.    
The shepherd makes a whistle placing his folding finger in mouth. Hearing the sound of the whistle the rabbits will run away. 
That is our village. 

(By your marriage, murmuring on love matters will run away / stop.)

No comments:

Post a Comment