Pages

Friday, 11 November 2016

அகநானூறு Agananuru 393

வேங்கட அரசன் புல்லி நாட்டில் குடவர்


பொருள் ஈட்டவரச் சென்ற அவர், 
புல்லி ஆளும் வேங்கட நாட்டில் 
குடவர் பகுத்துத் தந்த வரகுப் பொங்கலை உண்டு செல்வார். 

அந்த வேங்கட நாட்டைத் தாண்டிச் சென்றாலும் காலம் தாழ்த்தாமல் திரும்புவார். 
கவலையை விடு என்று தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.  

1

முகடுகள் கொண்ட மலைகள் பலவற்றின் வழியாகச் சென்று தொழில் புரிந்து பொருளீட்டிவர அவர் செல்கிறார். 

அங்கு வாழும் மக்கள் வழியில் செல்லும் புதியவர்களின் பசியைப் போக்க உணவளிப்பர். 

வரகு பழமையான மேட்டு நிலத்தில் விளையும். 
இரட்டை இலை கொண்ட பயிரில் விளையும். 

அவற்றைப் பாறைமீது கிடத்தி கவட்டைக் குளம்புகளை உடைய மாடுகளைப் பிணையல் கட்டி ஓட்டி உதிரச் செய்வர். 

அவற்றைத் தூற்றி (தெறீஇ) தன் அண்ணனும் தந்தையும் (தன்னையர்) தோளில் சுமந்துகொண்டு வந்த வரகை அங்குள்ள மகளிர் திருவையில் (சுழல்மரம்) அரைத்து, முறையாக (ஊழ்) உரலில் இட்டு உலக்கையால் தேங்காய்ப் பருப்புப் போல் வெண்ணிறம் ஆகும்படி குற்றி, சுளகால் நேம்பி, அரிசியாக்கிக் கொள்வர். 

அங்கே பெரிய சுனையில் இருக்கும் நீரை முகந்துகொண்டு வந்து, பானையில் (குழிசி) உலை வைத்து, கொன்றைப் பூக்களைப் (இணர் ததை கடுக்கை) போட்டு, களி கிண்டும் துடுப்பால் கிண்டி வரகரிசிப் பொங்கல் (பொங்கவிழ் புன்கம்) வைப்பர். 

அந்தப் பொங்கலைப் பசுவின் பாலுடன் பகிர்ந்து தருவர். 

இப்படி, ஆனிரைகள் பலவற்றுடன் குடவர் வாழும் நாடு, சொன்னதைச் செய்து முடுக்கும் (நெடுமொழி) புல்லி அரசன் ஆளும் வேங்கட நாடு.

2

இப்படிப்பட்ட வேங்கட நாட்டைத் தாண்டி, சென்றிருந்தாலும், 
தோழி! 
உன்னோடு உறங்குவதை மறந்து அவர் காலம் நீட்டிக்கமாட்டார். 

மலர் சூடியதும், 
மயில் தோகை போல் தழைத்திருப்பதும், 
தகர மண எண்ணெய் பூசப்பட்டதும், 
முச்சியாகச் சீவி முடிக்கப்பட்டிருப்பதும், 
நீரில் பூக்கும் குவளை, நிலத்தில் வேனில் காலத்தில் பூக்கும் அதிரல் ஆகிய பூக்கள் முடிக்கப்பட்டிருப்பதும் 
ஆகிய கூந்தலை உடைய உன்னுடன் உறங்குவதை மறந்து அவர் காலம் நீட்டிக்கமாட்டார்.

 











பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை
1
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,               5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்   10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,            15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்   20
2
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின் 25
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

“He will not stay in his earning place for a long time. 
Don’t worry”, the friend maid consoles her lady saying more. 

He is going through the route where Kudavar, the peoples of western region host removing hungry of the new comers passing through the way. 

Varagu millet grows in their field. 
The yield of the corn will appear between two leaves. 
They will separate the kernels corn threshing by the hoofs of oxen. 

They will carry kernels on their shoulders to their house. 

The women will separate it rice grinding between wooden-wheels; clean into white pounding in mortar by plunger; and remove the wastes using ‘sulagu-muram’ so as to appear white in color as the inner part of coconut. 

They will cook adding spring-pond water and ‘Kadukkai / Kontrai’ flowers. 

It will be cooked into past ‘pongal’. 

They will remove the hunger of newcomers by the route sharing their food. 

It is Venkadam-country ruled by the king ‘Pulli’.       

Even if your man goes beyond the country, he will not stay forgetting the sleep, he enjoyed on your fragrant braided hair.


No comments:

Post a Comment