கான் அமர் நன்னன்
அவன் கெஞ்சுகிறான்.
உன்னை அவனுக்குத் தருவதாக
ஒப்புக்கொண்டேன்.
நீ உன்னை அவனுக்குத் தா.
இல்லாவிட்டால் நான் உன்னை விட்டுவிட்டுக்
காட்டுக்குப் போய்விடுவேன்.
அவன் உன் நலனை உண்பான் – என்று தோழி தன் தலைவியிடம் கூறுகிறாள்.
1
தாழ்ந்த பெரிய வலிமை மிக்க கையை உடைய ஆண்யானை
தன்னை விரும்பிய பெண்யானையைத் தவற விட்டுவிட்டு இளந்தளிர்களை உண்ணாமல் வாடி மெலிந்த
உடலோடு இருப்பது போல, பண்புள்ள தன் உடம்பு மெலிவதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும்
உன்னை நாடி அவன் வந்து நிற்கிறான்.
2
நீ பூந்தாதுகளால் செய்யப்பட்ட பொம்மை போன்ற
பெண்.
கண்டார் விரும்பும் மென்மையான இயலினை உடையவள்.
கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத
மடமைக் குணம் கொண்டவள்.
உனக்குத் தீங்கு நேராவண்ணம் உன் தலைவியை என்னோடு கூட்டிவைக்கும்
‘புணை’ (தூது) ஆக அவளிடம் நீ செல்லவேண்டும் என்று
கெஞ்சுகிறான் (தண்டும்).
தொடர்ந்து பின்னே வந்து
அவன் பெரிதும் (நன்றும்) கெஞ்சுகிறான்.
அவன் தன்
நெஞ்சு அழிந்து மீளுதல் மிகவும் கொடியது.
தோழி, இதனைக் கேள்.
இனி, நீ அவனை ஏற்றுக்கொள்
(ஒல்).
3
அவன் மலைநாட்டின் தலைவன் (வெற்பன்).
பெருமழை பொழிந்து காடே இருண்டுகிடக்கும் நள்ளிரவில்
உயர்ந்த கழுதுப் பந்தலில் இருந்துகொண்டு காவல் காக்கும் சேணோன் கவணில் வீசிய கல்லின் அடி பட்டு தினை வயலில் மேய்ந்த யானை தன் இனத்துடன் ஓடும்.
கவண் கல் பாயும் இடியோசை
கேட்டு மறம் கொண்ட புலி உறுமும்.
காட்டுக் கோழியின் சேவல் கதறும்.
நனவில் நடுக்கம்
(கட்சி) கண்டது போல நல்ல மயில் ஆடும்.
இப்படி மலையே
நடுங்கும்.
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.
மேலும்,
4
அவன் உன்னைப் பெறாமல் பிரிந்தால், அது உனக்கு
உரிய பண்பு ஆகாது.
அவன் பிரிந்தால் உன்னைப் பிரிந்து நான் காட்டுக்குச் சென்றுவிடுவேன்.
செய்வினை கெட்ட வேந்தன் ஒருவன் தன் படையுடன்
வந்து நன்னனின் கோட்டையை முற்றுகையிட்டான்.
நன்னனால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
கோட்டையை விட்டுவிட்டுக் கையில் பிடித்த வேலுடன் ஓங்கிய மூங்கில் காட்டுக்குச் சென்று,
காட்டில் இருந்துகொண்டு நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்றினான்.
அந்த நன்னன் போல
நான் காட்டுக்குச் சென்றுவிடுவேன்.
அவன் உன்னைப் பெறுவான்.
நன்னன் கோட்டையைப் பகைமன்னன்
பெற்றது போலப் பெறுவான்.
![]() |
![]() |
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி
1
தாழ்
பெருந் தடக் கை தலைஇய,
கானத்து,
வீழ்
பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை
உண்
குளகு மறுத்த உயக்கத்து அன்ன,
பண்புடை
யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ,
பின்னிலை
முனியான் ஆகி, ''நன்றும், 5
2
தாது
செய் பாவை அன்ன தையல்,
மாதர்
மெல் இயல், மட நல்லோள்வயின்
தீது
இன்றாக, நீ புணை புகுக!''
என
என்னும்
தண்டும் ஆயின், மற்று அவன்
அழிதகப்
பெயர்தல் நனி இன்னாதே 10
ஒல்
இனி, வாழி, தோழி! கல்லெனக்
3
கண
மழை பொழிந்த கான் படி
இரவில்,
தினை
மேய் யானை இனன் இரிந்து
ஓட,
கல்
உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்
வாய்க் கவணின் கடு வெடி
ஒல்லென, 15
மறப்
புலி உரற, வாரணம் கதற,
நனவுறு
கட்சியின் நல் மயில் ஆல,
மலை
உடன் வெரூஉம் மாக் கல்
வெற்பன்
பிரியுநன்
ஆகலோ அரிதே; அதாஅன்று,
4
உரிது
அல் பண்பின் பிரியுனன்ஆயின், 20
வினை
தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனைகொல்
தானையொடு முன் வந்து இறுப்ப,
தன்
வரம்பு ஆகிய மன் எயில்
இருக்கை
ஆற்றாமையின்,
பிடித்த வேல் வலித்
தோற்றம்
பிழையாத் தொல் புகழ் பெற்ற, 25
விழை
தக ஓங்கிய கழை துஞ்சு
மருங்கின்
கான்
அமர் நன்னன் போல,
யான்
ஆகுவல், நின் நலம் தருவேனே.
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
மோசிகீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
Your lover is pleading me to help him to receive your acceptance. Please give him your concern. Otherwise, I shall leave you alone here and go to the forest letting him to enjoy you. The friend-maid says to her lady.
His body becomes lean without getting your sexing, as a male elephant not eating any leaves for it lost its female somewhere in the forest.
He comes every day because of his good character with the hope of getting your acceptance.
You are a girl like a doll made of pollen.
You are tender and innocent in your character.
He asks me to mediate to get your concurrence by will.
It is not good to leave him disappointment.
Hence, my friend, I hope you will give him your willingness for sexual enjoyment.
He is the man of the mountain where the watch-man of the millet field, being on a open shed at the top of a tree, throws stone by playing sling; that will make sound as thunder; on hearing this sound leader-elephant will run away from the field along with its family.
On hearing the shooting sound of the sling-stone, the tiger roars; wild cock sounds; peacock dances mistaking the sound for thunder.
It is not up to your character to let him disappointment.
If you let him disappointment, I shall leave you here; and go away to the forest letting him to enjoy you by force.
Once, a king with his large force sieges the fort of King Nannan; King Nannan could not face him in war; flees away to the forest; remaining in the forest he ruled his county.
As Nannan do, I shall flee to the forest to happen good thing.



No comments:
Post a Comment