Pages

Thursday, 10 November 2016

அகநானூறு Agananuru 391

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.


இரையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காட்டுப்பூனையின் பற்கள் போல் அதிரல் என்னும் காட்டு மல்லிகை பூத்துக்கிடக்கும். 

பூ விற்கும் பெண்டிர் வட்டியில் (வட்டி போல் அகன்ற கூடையில்) அதிரல் பூக்களைப் பறித்துக்கொண்டு வருவர். 

கூடை கொள்ளாத பூக்களைத் தேன் மணக்கும் முல்லைப் பூக்களோடு சேர்த்து அங்கேயே கொட்டிவிட்டு வருவர். 

என் காதலர் என்னோடு உடலுறவு கொண்ட பின்னர் என் தலை முச்சியில் பொதிந்து கசங்கிக் கிடக்கும் பூக்கள் போல் அவர்கள் கொட்டிச் சென்ற பூக்கள் வதங்கிக் கிடக்கும். 

அவற்றைப் பார்க்கும்போது நான் பண்டு அணிந்த பூக்கள் என் நினைவுக்கு வரும்.

தோழி!

அவர் சென்ற நாட்கள் இன்றோடு சிலவே கணக்கில் வருகின்றன. 
அது முதல் என் கண்கள் மூடவே இல்லை.

யானை மரப்பட்டையை உரிக்க மரத்தைக் குத்தும். 
அதில் பாய்ந்த தன் வெள்ளைக் கொம்புகளை அதனால் பிடுங்க முடியாத நிலையில் தன் துதிக்கையை மரத்தில் ஊன்றித் தள்ளிக்கொண்டு தன் கொம்பை இழுக்கும். 
அப்போது அதன் துதிக்கை மரத்தில் ஏறும் மலைப்பாம்பு போல் தோன்றும். 

இப்படிப்பட்ட காட்டில், வறண்ட கோடைக்காலத்தில் அவர் சென்றுள்ளார். 

அவரை நினைத்து என் கண்கள் மூடவில்லை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,           5
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ  10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது, யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
குன்று புகு பாம்பின் தோன்றும்,
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
காவன் முல்லைப் பூதனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The lady, waiting for her husband return back earning says to her friend-maid.

Flowers Atiral will bloom in the forest as the teeth of wild-cat.
Flower selling girls gather them in their baskets and leave extra flowers they gathered on the ground. 
They will remain fading on the ground along Mullai-flowers. 
They will remain fade as the flowers braided on my hair become fade after sex-mating.

You, my friend, you see only few days are gone after he left me; and my eyes are refusing to shut to sleep.

He is crossing the mountain, where the elephant try to pull out its tusk plunged into the tree when peeling the shin of the tree to eat, using its trunk touching the tree; the trunk appears as python. 

Thinking the dangerous route I am sleep-less.


No comments:

Post a Comment