உப்பு விற்கும் பெண்ணைக் காதலிக்கும் ஒருவன் அவளைப் பற்றித் தன் நண்பனிடம் விளக்குகிறான்.
உமணர், உவர் நீரில் விளைந்த உப்பை, வாங்குவோருக்காக,
புழுதி படிந்த வழியில், செறிவுள்ள கோல் வண்டியில் ஏற்றிக்கொண்டு வெளியிடங்களுக்கு வரிசையாகவும்
கூட்டமாகவும் செல்வர்.
இந்தக் ‘கணநிரை வாழ்க்கை’ நல்லதா, இல்லையா?
உமணர்களின் பெண் ஒருத்தி தெருவில் உப்பு
விற்றாள்.
கூந்தலை வாரி முடித்துத் தலையில் உச்சிக்கொண்டை போட்டிருந்தாள்.
வியக்கும் வகையில் அமைந்திருந்த அகன்ற இடையில் ஒப்பனையாக அவள் அணிந்திருந்த தழையாடை நெளிந்தது.
“நெல்லும் உப்பும் சம விலை; ஊர் மக்களே! உப்பு வாங்குங்களே” என்று கூறிக்கொண்டு சென்றாள்.
கூந்தலை வாரி முடித்துத் தலையில் உச்சிக்கொண்டை போட்டிருந்தாள்.
வியக்கும் வகையில் அமைந்திருந்த அகன்ற இடையில் ஒப்பனையாக அவள் அணிந்திருந்த தழையாடை நெளிந்தது.
“நெல்லும் உப்பும் சம விலை; ஊர் மக்களே! உப்பு வாங்குங்களே” என்று கூறிக்கொண்டு சென்றாள்.
“அழகிய உந்தி கொண்டவளே,
மூங்கில் போன்ற தோளை உடையவளே,
உன் உடம்பு உப்புக்கு விலை கூறுவாயா” என்று அவளை நான் கேட்டுக்கொண்டு தடுத்தேன்.
அவள் தன் செவ்வரி பரந்த கண்ணால் என்னைத்
தின்பது போல் விருப்பத்துடன் பார்த்தாள்.
“யாரையா நீர்? என்னைத் தடுத்து நிறுத்துவது” என்று பெருஞ்சிரிப்பு சிரித்துக் கேட்டுக்கொண்டே போய்விட்டாள்.
“யாரையா நீர்? என்னைத் தடுத்து நிறுத்துவது” என்று பெருஞ்சிரிப்பு சிரித்துக் கேட்டுக்கொண்டே போய்விட்டாள்.
அவள் கையில் வளையல்கள் அணிவகுத்திருந்தன.
பல வகையிலும் சிறந்து விளங்கும் ‘பேதை’ அவள்.
என் நெஞ்சு அவளிடம் சென்று தங்கிவிட்டது.
என்ன செய்வேன்?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்
உவர் விளை உப்பின்
கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய
சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர்
பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான்
நன்று கொல்லோ?
வணர் சுரி முச்சி
முழுதும் மன் புரள, 5
ஐது அகல் அல்குல்
கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை
ஒல்குவயின் ஒல்கி,
'' ''''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'''' எனச் சேரிதொறும் நுவலும்,
அவ் வாங்கு உந்தி,
அமைத் தோளாய்! நின் 10
மெய் வாழ் உப்பின்
விலை எய்யாம்'' என,
சிறிய விலங்கினமாக, பெரிய
தன்
அரி வேய் உண்கண்
அமர்த்தனள் நோக்கி,
''யாரீரோ, எம் விலங்கியீஇர்?''
என,
மூரல் முறுவலள் பேர்வனள்
நின்ற 15
சில் நிரை வால்
வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு
ஒழிந்தது, என் நெஞ்சே!
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது;
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்.
அம்மூவனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
A man, who falls in love with a girl selling salt, explains her beauty to his friend.
Gangs of salt farmers carry their salt in vans in rows to sell in remote villages.
Is a girl in this kind of family good to marry, if I choose?
I saw a girl selling salt in the street.
She calls for the people to purchase salt.
She raises her voice “Measurement of salt is equal to the same measurement of paddy to exchange”.
I fall in love with her and stopped her saying “How much I have to pay to enjoy your body”.
She speaks with her eyes in desire; broke laughter and leaves the street.
I am unable to forget her.
What shall I do to get her?


என்ன விளக்க உரை
ReplyDeleteஅதர்படு -அந்த வழியில் படும் ஊர்களில் விற்று விட்டு
பூழிய-பூழி நாடு
சேட்புலம்-தூர நாடு
தூரத்தில் உள்ள பூழி நாடு செல்லும் உமணர்
உமணர் பூழி நாட்டின் பூர்வகுடி
உப்பு பூழியர் என்ற மக்கள் இன்றும் உள்ளனர்
பூழி என்றால் மணல்,மண் என்ற அர்த்தம் உள்ளது
ஏற்கிறேன்
Delete