Pages

Wednesday, 9 November 2016

அகநானூறு Agananuru 389

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.


1

தோழி, இதனைக் கேள். உனக்குத் தெரியாது போலும். அதனால்தான் அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்குமாறு வற்புறுத்துகிறாய். 

நெளி நெளியான என் கூந்தலுக்குச் சந்தனப் புகை ஊட்டி அவர் கோதிவிட்டார். மலரும் பூக்களைச் சூட்டிவிட்டார். இனிய மணம் கமழும்படி என் நெற்றியில் திலகம் வைத்தார். பல்வேறு மலர்களை அல்லி மலருடன் கிள்ளிக் கொண்டுவந்து என் முலைமேல் அப்பிவிட்டார். என் தோளில் தொய்யில் எழுதினார். கால் பரட்டில் செம்பஞ்சுக் குழம்பு படிந்திருக்குமாறு ஊட்டிவிட்டார். இப்படியெல்லாம் என்னை ஒப்பனை செய்து அழகு பார்த்து மகிழ்ந்தார். 
அத்துடன் உன்னையும் பாராட்டினார். 
பல்வகைப் பூக்கள் பரப்பிய மெத்தையில் பகல் காலத்தில் கூட என்னோடு இருந்தார். 
இப்படி இருந்தவர்தான் இப்போது என்னை விட்டுவிட்டு விரைந்து சென்றுவிட்டார்.

2

அவரிடம் வந்து இரப்பவர்களின் கை நிறையும்படி இவர் வாரி வழங்க வேண்டுமாம். 
இவரைக் காப்பாற்றுபவர்களுக்கு புதியனவற்றைத் தந்து அவர்களின் உள்ளம் ஏங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமாம். 
இதற்காகப் பொருள் வேட்டைக்குப் போய்விட்டார். 
சினம் கொண்டு இவரைக் கூறியவர்களின் துன்பம் பாழ்படவேண்டுமாம். 
அதற்காக இவர் தன் புகழை நிலைநாட்ட வேண்டுமாம். 
அதற்காகச் சென்றுள்ளார்.

3

சேர மன்னன் வானவரம்பன் வலிமை மிக்க வேலை உடையவன். 
அவன் நாட்டைத் தாண்டிச் சென்றால் வேனில் காலத்தில் கொடுமை பட்டுக் கிடக்கும் காடு. 
அந்த வழியாகச் செல்பவர்கள் தம் கூட்டத்தைப் பிரிந்து ஓடும்படி அவர்களின் பொருள்களைக் கைப்பற்றிக்கொள்வதற்காகக் கொலைசெய்யும் மக்கள் வாழும் காடு அது. 
யானையைக் கொன்று அதன் குருதியால் செந்நிறம் பட்டுக் கிடக்கும் நிலத்தில் இருந்துகொண்டு அரிமா (சிங்கம்) இடி போல் முழங்கும் காடு அது. 
வானளாவிய மரங்கள் மண்டிக்கிடக்கும் அந்தக் காட்டின் வழியே சென்றுள்ளார். 
அதற்காக வருந்துகிறேன்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,           5
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
மனைவயின் இருப்பவர் மன்னே துனைதந்து,        10
2
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்  15
3
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை 20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
நக்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The friend-maid asks her lady to tolerate the parting of time being of her husband. 
The lady replies to her.

You, my friend, you do not know how he behaves with me. 
That is why you are compelling me to keep patience when he is away. 

He dries my hair after bathing with the smoke firing sandalwood. 
Then he separates them without clubbing by his fingers. 
He adorns my hair braiding with flowers. 
He makes up my forehead with ‘tilak’. 
He applies my breasts with flowers including water lily. 
He writes tattoos on my shoulders. 
He applies red color on the edges of my feet with a paste of leaves of Marutani. 
Thus he makes up me and enjoys my beauty. 
More than that, he praises your helping mood. 
He was on my bedspread with flowers on even in daytime. 
This kind of man is leaving me alone.

He wants to be famous among society; offering needful things to the beggars; helping the elders who foster him earlier; pleasing the men of enmity by his character; all these can be possible only with ‘money’; that he wants to earn money in distant places.

He crosses the kingdom of King ‘VanaVaramban’, the dry area where robbers will kill the strangers to get their money. 
There will be lions roaring after killing elephants. 
I am suffering for dangers he has to face.



No comments:

Post a Comment