“வெறியாட்டு நிகழ்த்தும் வேலனை வினவினால் என்ன” தலைவி தோழியிடம் கேட்கிறாள்.
1
தோழி, கேள். நாம் நம் மலையில் சந்தன மரங்களை
வெட்டிச் சாய்த்து உழுது விதைந்து விளைந்திருந்த தினையைக் காத்துக்கொண்டிருந்தோம்.
பூத்து மணக்கும் வேங்கை மரக் கிளையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் (இதணம்) ஏறி இருந்துகொண்டு, மூங்கிலை அறுத்துச் செய்யப்பட்ட
தட்டைக் கருவியில் ஒலி எழுப்பித் தினையைக் கவரும் குருவிகளை ஓட்டிக்கொண்டிருந்தோம்.
அப்போது தும்பி இன வண்டுகள் பூக்களில் தேன் உண்ணும் இன்னிசையைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
2
அங்கே, காளை ஒருவன் வந்தான்.
“மேகம் போல
ஈரமான கூந்தலை உடைய நல்லவர்களே, புண் பட்ட மேனியுடன் பெரிய தந்தம் கொண்ட ஆண்யானை ஒன்று
உங்களது தினைப்புனத்தின் வழியே போயிற்றா” என்று வினவிக்கொண்டே வந்தான்.
சினம் கொண்ட
அவனது வேட்டை நாய்கள் (ஞமலி) அவனைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.
“யானை வந்ததா” என்று கேட்டுவிட்டு அவன் போய்விட்டான்.
கையிலே வில் வைத்திருந்த அந்தக்
காளையின் மார்பில் அணிந்திருந்த சந்தனமும் அவன் நம்மிடம் நடந்துகொண்ட தகைமைப் பண்பும்
என் நெஞ்சை உருத்துகின்றன.
இந்தத் துன்பம் தாய்க்குத் தெரியவில்லை.
3
என் நல்ல நெஞ்சத்ததை அவள் “வெறி” என்று உணர்ந்துகொண்டாள்.
வேலன் முருகனைப் பாடும் முதிர்ந்த வாயினை உடைய வேலன் பூசாரியை அழைத்தாள்.
வேலனோ, “எம்
இறைவன் வேலன் இவளை வருத்துகிறான்; இந்த நோயைத் தணிக்கும் மருந்து எனக்குத் தெரியும்”
என்கிறான்.
நாம் வேலனிடம் இப்படிக் கேட்டால் என்ன? “உன் இறைவன் என்னை அணங்கினான் என்று
சொல்கிறாயே, ஆசை கொண்ட ஆண்யானை அம்பு பட்டுப் போய்விட்டது என்று காட்டுமானை வேட்டையாட
அதன் கால் தடத்தைப் பார்த்துக்கொக்கொண்டு உன் இறைவன் செல்வானோ” என்று கேட்டால் என்ன?
- “ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பு” – செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போன்ற தலைவியின் கண்ணாகிய அம்புக்கும், யானை மேல் பாய்ந்து குருதி தோய்ந்த அம்புக்கும் பொருந்தும் இரட்டுறு-மொழி
- “மையல் வேழம்” – மை மேகம் போல் நிறம் கொண்ட யானைக்கும், காதல் மயக்கம் கொண்ட தலைவனுக்கும் பொருந்தும் இரட்டுறு மொழி.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி
1
அம்ம வாழி, தோழி
நம் மலை
அமை அறுத்து இயற்றிய
வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம்
அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு
தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக்
குரீஇ ஓப்பி, 5
ஓங்கு இருஞ் சிலம்பின்
ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை
நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந்
தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா
இருந்தனமாக,
2
''மை ஈர் ஓதி
மட நல்லீரே! 10
நொவ்வு இயற் பகழி
பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு
ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?''
என,
சினவுக் கொள் ஞமலி
செயிர்த்துப் புடை ஆட,
சொல்லிக் கழிந்த வல் விற்
காளை 15
சாந்து ஆர் அகலமும்
தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும்
எவ்வம் உணராள்,
3
நன்னர் நெஞ்சமொடு மயங்கி,
''வெறி'' என,
அன்னை தந்த முது
வாய் வேலன்,
''எம் இறை அணங்கலின்
வந்தன்று, இந் நோய்; 20
தணி மருந்து அறிவல்''
என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே
''கனல் சின
மையல் வேழ மெய்
உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி
வழி ஒற்றி, 25
வேட்டம் செல்லுமோ, நும்
இறை?'' எனவே?
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம்
ஆம்.
ஊட்டியார் பாடல்
"ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பு" என்னும் தொடரைக் கையாண்டுள்ளதால் இந்தப் புலவருக்கு ஊட்டியார் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது
கி.மு.
காலத்துப் பாடல்
The lady asks opinion of her friend-maid to stop the house Veri-festival in which she treated as she is mad.
You, my friend, you know, once we were guarding the millet harvest from stealing birds.
It was the field made cutting down the trees Vengai; and plowed; and seeded.
We were on the top of a stage on the branches of Vengai-tree.
We used musical instrument to drive away the birds from harvest-field.
We were hearing the humming sound of birds eating honey in flowers.
There, the man like a bull came along with his hunting dogs.
He asked us “Have you seen an elephant came here with wound by shoot arrows?” he merely asked and leaved immediately.
I send my heart along with his chest with sandal paste and appealing behavior.
My mother watching my behavior decides to cure me by a Veri-festive.
Priest Velan came to cure me.
He says that he knows the sick in mind; it is his God Murugan is taunting me. It is not correct.
I want ask the priest “Will his God Murugan shoot an elephant; and further search for deer to shoot after the wounded elephant missed”?
By this way, she reveals her love thought to the priest.


No comments:
Post a Comment