“பொருளீட்டி வரச் சென்றுள்ளார்” என்று சொல்லிக்கொண்டு வாழ்பவர் உளராயின் அவரிடம் “சென்று வருகிறேன்” என்று சொல்லுங்கள், என்று தோழி தலைவியின் விருப்பத்தைத் தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.
1
நீர் சென்றால் இவளது அணிகலன்கள் ஊடலிலிருந்து நழுவும்.இவளது தோள்-வனப்பு சாயும்.வரியுடன் மதமதக்கும் இவளது ஈரக் கண்கள் அழும்.“செல்கிறேன்” என்று சொல்லாதீர்கள்.“வருகிறேன்” என்று சொல்லுங்ககள்.
2
பூத்திருக்க வேண்டிய கண்கள் பறைந்துபோய், வாரிவிடாத தலையுடைய தன் சிறுவர்களுடன் வண்ணாத்தி செல்வாள்.பூ வேலைப்பாடு அமைந்த துணிகளைக் கசக்கிப் பிழிவாள்.துவைந்த துணியின் கரைகளில் கஞ்சிப்பசை போட்டு விரல் நகங்களால் விரித்து விடுவாள்.அப்படிப் புலத்தி துவைத்துத் தந்த அடை பொலிவுறுமாறு உன் மனைவி உடுத்திக்கொண்டிருக்கிறாள்.அந்த ஆடையும் அவள் அழகும் சிதைய வைத்துப் பார்த்துக்கொண்டு நீ செல்கிறாய்.
3
கொடுஞ்செயல் புரியும் வேட்டுவன் புழங்கிப் பழக்கமுள்ள புதரில் மறந்ததுகொண்டு அம்பு எய்யக் காத்திருப்பதைப் பார்த்துவிட்ட பெண்-காடை தன் ஆண்-காடையைக் கூவி அழைக்கும் காட்டில் நீ செல்கிறாய்.இதல் – காடை – இதன் பெண் வரிவரியான புறத்தோற்றம் கொண்டது. மணி போன்ற கண் கொண்டது. இதன் ஆண் பொறிப் பொறியான புறத்தோற்றம் கொண்டது. காலில் கூரிய முள் போன்ற நகங்களைக் கொண்டது.
4
நீ செல்லும் வழியில் நடுகல் இருக்கும்.வில்லாற்றலைக் காட்டிப் போரிட்டு, தன் புகழை நிலைநாட்டிய மறவனுக்காக நடப்பட்ட கல் அது.மறவர் பலருக்கு நிரல் நிரலாக நடப்பட்டிருக்கும் நடுகல் கோயில் அது.அங்கு இருக்கும் பல்லி சிறிய ஓசையுடன் குரல் கொடுக்கும்.
5
அது போல வீட்டில் பல்லி ஒலிக்கும்போது, நெற்றியில் ஓடை கட்டிய யானைமேல் செல்பவராக இருந்தாலும், “என் கணவர் பொருளீட்டச் சென்றுள்ளார்” என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டு இல்லத்தில் இருப்பவர் இருந்தால் அவரிடம் “செல்கிறேன்” என்று சொல்.
இவ்வாறு தோழி கூறக்கேட்ட தலைவன் தான் செல்வதைக் கைவிட்டுவிடுகிறான்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
1
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
அரி மதர் மழைக்
கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின்
மன்னோ
2
பூக் கண் பறைந்த
புன் தலைச் சிறாஅரொடு
அவ் வரி கொன்ற
கறை சேர் வள் உகிர்ப் 5
பசை விரல் புலைத்தி
நெடிது பிசைந்து ஊட்டிய
பூந் துகில் இமைக்கும்,
பொலன் காழ் அல்குல்,
அவ் வரி சிதைய
நோக்கி, வெவ் வினைப்
3
பயில் அரில் கிடந்த
வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின்
மணிக் கட் பேடை 10
நுண் பொறி அணிந்த
எருத்தின், கூர் முட்
செங் கால், சேவல்
பயிரும் ஆங்கண்,
4
வில் ஈண்டு அருஞ்
சமம் ததைய நூறி,
நல் இசை நிறுத்த
நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல்
பொருந்தி, இமையாது, 15
இரை நசைஇக் கிடந்த
முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின், ''பெரிய
5
ஓடை யானை உயர்ந்தோர்
ஆயினும்,
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர்மன்'' என இருக்கிற்போர்க்கே. 20
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு
அழுங்கச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
Hero decides to leave heroine in house and go for earning.
The friend-maid of the heroine reveals her lady’s feeling by which he stops his intention of leaving.
If you leave her, her ornaments in body will slip down.
The beauty in her shoulder will fade.
Please don’t say ‘I am leaving’. Please say ‘I shall come again’.
The lady who washes the clothes of the village people will go carrying clothes along with her baby having clean-less hair and longing eyes.
She washes the clothes by her hands and opens shrink edges in cloth using rice-cooked water.
Your wife wears the washed clothes that were given by the lady.
It will spoil while she tears.
You are going to cross the forest where the female quail, seeing the hunter aiming to shoot, calls its male alerting.
There will be rows of hero-stones erected for the famous deeds of hero-men.
The leopard in hero-stone also will alarm to the male quail.
If there is anybody who can tolerate the separation of her spouse, you can tell her ‘I am leaving’.

No comments:
Post a Comment