தலைவி நிலத்தில் \ விருந்து ஏர் \ விருந்து உழவு
அமைதியாக இருந்த வேந்தன் போரைத் தொடங்கி
முடித்துக்கொண்டான்.
காதல் வேட்கையோடு நான் தேரில் ஏறினேன்.
இதுதான் எனக்குத் தெரியும்.
வழியில் நிகழ்ந்தது எதுவும் எனக்குத் தெரியாது.
என் இல்லத்துக்கு வந்துவிட்டேன்.
இங்கே
முயல்-குட்டிகள் விளையாடுகின்றன.
ஊரின் முல்லைநில வயலில் வரகு விளைந்திருக்கிறது.
என்
மனைவி இருக்கும் வீட்டின் முன் நிறுத்தி “இறங்கு” என்கிறாய்.
வியக்கிறேன்.
காற்றையே
குதிரையாக்கித் தேரில் பூட்டித் தேரை ஓட்டிவந்தாயா?
உருவம் இல்லாத உன் மனத்தையே குதிரைகப்
பூட்டித் தேரை ஓட்டிவந்தாயா?
வலவ! (தேரோட்டியே)
நீதான் சொல்லவேண்டும்.
இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் தேரோட்டியின் மார்பைத் தழுவிக்கொண்டான்.
தலைவிக்கு இனி விருந்துதான்.
ஒப்புநோக்குக
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – கம்பராமாயணம்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – கம்பராமாயணம்
வில்லை எடுத்தது கண்ணில் தெரிந்தது. வில்
முறிந்தது காதில் கேட்டது.
அதுபோல,
தேரில் ஏறியது நினைவுக்கு வருகிறது. “இறங்கு”
என்று பாகன் சொன்னது தலைவன் காதில் கேட்டது.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை
''இருந்த வேந்தன் அருந்
தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந்
தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது,
வந்த
ஆறு நனி அறிந்தன்றோ
இலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும்
முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின்
சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை
இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி
மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை
வளி பூட்டினையோ?
மான் உரு ஆக
நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ!''
என, தன்
வரை மருள் மார்பின்
அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன்,
நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது
வரவு கண்டு, உழையர் சொல்லியது.
ஒக்கூர் மாசாத்தியார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
The king ends his war in peace.
I climbed on chariot with lust mood; I remember.
“Please get down” the words I am hearing.
What happened in the meantime, I could not understand.
Now I am in front of my house where my wife welcomes me.
Young rabbits are playing in the field where plants grey millet (Varagu) is growing.
Is it your horse that pulls the chariot is wind-horse or thought-horse?
I am wondering. Please tell me. Saying these words, the hero hugs his chest of his chariot driver in glad.
The heroine got bliss.

No comments:
Post a Comment