உடன்போக்கு
தன்னை ஒத்த மயிலின் இயல்பினை உடைய விளையாட்டுத்
தோழிமாரும், என்னைப் போன்ற தாய்மார்களும் காணுமாறு, இந்த வளமனையில், மேன்மக்கள் திருமண
நாளில் தகர மண-எண்ணெய் தடவி நீராட்டி, என்னைப் போன்றவர்கள் திருமணம் செய்து கூட்டிவைத்த
பின்னர் செல்லலாமல், அதற்கு முன்பாகவே அவனுடன் சென்றுவிட்டாளே!
நெல்லிக் காய்கள் காம்போடு
நிலத்தில் விழும் மலைப் பிளவில் சென்றுவிட்டாளே!
வழியில், விரிந்தாடும் ஆலம் விழுதுகள்
தம் இடுப்பை உரசச் சென்றுவிட்டாளே!
அவளது துணைவன் வளையலணிந்த அவளது கையைப் பற்றி இழுத்துச்
செல்வானே!
கிளைத்து வலிமையுடன் பிணைக்கப்பட்டுள்ள பசுமை நிற வயிரம் பதித்த கோவை அணிந்திருக்கும்
இடுப்பைப் பிடித்து இழுத்துச் செல்வானே!
ஆடும் மயில் போல கூந்தல் அசைய, அவன் அவளைத்
தூக்கிச் செல்ல, என்னை நினைக்காமல், சிவந்த வாயில் வெண்பல் முட்கள் தெரியுமாறு சிரித்துக்கொண்டு
செல்வாளே!
சிறு சிறு வலிமையான கண்ணிகள் தொங்கும் கால் சிலம்பைக் கழற்றிவிட்டுத் திருமணம்
செய்துவைக்கும் சடங்கு அவள் அறியாத நாட்டில் நடக்குமே.
இது கொடுமை அல்லவா? – இவ்வாறு
பிதற்றிக்கொண்டு செவிலித்தாய் கலங்குகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
தன் ஓரன்ன ஆயமும்,
மயில் இயல்
என் ஓரன்ன தாயரும்,
காண,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடு நகர், புரையோர்
அயர, 5
நல் மாண் விழவில்
தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச்
செல்லாள், காம்பொடு
நெல்லி நீடிய கல்
அறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை
நெடு வீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, 10
வளையுடை முன்கை அளைஇ,
கிளைய
பயில் இரும் பிணையல்
பசுங் காழ்க் கோவை
அகல் அமை அல்குல்
பற்றி, கூந்தல்
ஆடு மயில் பீலியின்
பொங்க, நன்றும்,
தான் அமர் துணைவன்
ஊக்க, ஊங்கி, 15
உள்ளாது கழிந்த முள்
எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு
கழீஇ,
அறியாத் தேஎத்தள் ஆகுதல்
கொடிதே.
மகட் போக்கிய செவிலித்தாய்
சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
She elopes with her lover.
Her foster-mother feels and says.
Without having marriage-ceremony in this house she eloped.
If she has married in this house her playmates like peacock and mothers like me would have enjoyed.
Elders would have her ceremonial bath with fragrant oil on the marriage day and make the wedding couple unit.
But without the ceremony here she elopes.
On her way, Indian-gooseberry will fall spreading on her route.
The hanging roots of Banyan tree will dash on her hip.
Her lover will pull her hands.
He will carry her lifting her hip with ornaments to hang her hair.
She will accept his mischief.
The removal of anklet from her leg on the marriage ceremony will be performed in her unknown place.
If she has married here I shall be happy.
Here is her house like the palace of king Cholan with elephant and chariot force in the river bed of Cauvery.

No comments:
Post a Comment