தாய் மகள் வளர்த்த வயலைக் கொடியிடம் புலம்புகிறாள்
தன்னைப் பாதுகாத்து வளர்த்தெடுத்த என்னையும்
அவள் நினைத்துப் பார்க்கவில்லை.
ஊர்ப் பெண்களும், தெருப் பெண்களும் மகள் ஓடிவிட்டாள்
என்று அலர் தூற்றுகின்றனர்.
அவளோ காட்டிலும் கானத்திலும் அவனோடு துணிந்து சென்றுவிட்டாள்.
வயலைக் கொடியே!
மாலையில் தொடுத்து அழகு சேர்த்துக்கொள்ள உன்னை அவள் பறிக்கவில்லையே
என்று வாடி வதங்குகிறாய்.
தழையாடை செய்து அவள் தன் அல்குலில் அணிந்துகொள்ள தழைத்து
உதவிவந்தாயே.
வளையல் ஒலிக்கவும், காலில் சிலம்பு ஒலிக்கவும், மடப்பம் நிறைந்த கண்ணால்
தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நாள்தோறும் நடை பயின்று வந்து உனக்கு நீர் ஊற்றுவாளே!
இனி உனக்கு நீர் ஊற்றிக் காப்பாற்றுவார் யார்?
வழலைக் கொடியே, நீ இரங்கத்தக்க கொடியாகிவிட்டாயே!
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த … அம் குழை – கிளைத்த கொடிகளாய் நட்ட கொம்பின் மேல் படர்ந்து தழைத்துள்ள வயலைக்கொடி
வினை அமை வரல் நீர் விழுத் தொடி – வேலைப்பாடு அமைந்த வளையல். ஓடிவரும் நீர் போல் விழுமிதாக அமைந்துள்ள வளையல்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
தற் புரந்து எடுத்த
எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு
அலர் எழ,
காடும் கானமும் அவனொடு
துணிந்து,
நாடும் தேயமும் நனி
பல இறந்த
சிறு வன் கண்ணிக்கு ஏர்
தேறுவர் என, 5
வாடினை வாழியோ, வயலை!
நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக்
கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக் கூட்டு அம் குழை
உதவிய,
வினை அமை வரல்
நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க
முகந்து கொண்டு, 10
ஆய் மடக் கண்ணள்
தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப்
பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப்
புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை?
அளியை நீயே!
மகட் போக்கிய தாய்
சொல்லியது.
கயமனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
Fostering mother feels for her daughter elopes with a man.
She, my daughter did not care me who foster her.
The people of the village and streets are murmuring about her elopement.
He is walking with her lover in forest and jungles.
You, Creeper Vayalai are suffering for; she didn’t gather you to make her garland and leaves-dress. She used to water you walking with her musical anklet; and looking at me.
Today onward who will water you?
No comments:
Post a Comment